பந்தூரானா
பந்தூரானா | |
---|---|
மேல் கோட்மர் கல்லெறி திருவிழா பந்துரானா இரயில் நிலைய மேடை எண் 1 கீழ்: சாய்ராம் கோயில் | |
ஆள்கூறுகள்: 21°36′N 78°31′E / 21.6°N 78.52°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | பந்தூரானா மாவட்டம் |
ஏற்றம் | 474 m (1,555 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 45,479 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 480334 |
வாகனப் பதிவு | M.P. 28 |
இணையதளம் | https://pandhurna.nic.in/en/ |
பந்தூரானா (Pandhurna), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பந்தூரானா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். ஜாம் ஆற்றின் [1] கரையில் அமைந்த பந்தூரானா நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கோட்மர் எனப்படும் கல்லெறி திருவிழாவிற்கு பெயர்பெற்றது.[2] இந்நகரம் மாநிலத் தலைநகரான போபாலுக்கு தென்கிழக்கே 263 கிலோமீட்டர் தொலைவிலும் நாக்பூருக்கு வடமேற்கே 88 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 474 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது குஜராத்தின் பாமன்போர் மற்றும் நாக்பூர் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 47ல் உள்ளது. இந்நகரம் ஆரஞ்சு பழத்தோட்டங்களுக்கு பெயர்பெற்றது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 வார்டுகளும், 10,243 குடியிருப்புகளும் கொண்ட பந்தூரானா நகரத்தின் மக்கள் தொகை 45,479 ஆகும். அதில் 23,478 ஆண்கள் மற்றும் 22,001 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.96% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.03% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 8.66% மற்றும் 6.02% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.55%, இசுலாமியர் 7.61%, சமணர்கள் 0.77%, பௌத்தர்கள் 3.36% மற்றும் பிற சமயத்தினர் 0.72% வீதம் உள்ளனர்.[3]
போக்குவரத்து
[தொகு]பந்தூரானா தொடருந்து நிலையம்[4] இரண்டு நடைமேடைகள் கொண்டது. இது நாக்பூர்-போபால் இருப்புப்பாதையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jam River", Wikipedia (in ஆங்கிலம்), 2025-03-17, retrieved 2025-04-22
- ↑ "Madhya Pradesh: Around 300 people injured in annual traditional Gotmar fair in Pandhurna". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2025-04-22.
- ↑ "Pandhurna Municipality City Population Census 2011-2025 | Madhya Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-04-22.
- ↑ "Pandhurna Railway Station | Trains Timetable passing through Pandhurna Station". www.cleartrip.com. Retrieved 2025-04-22.