பந்துல வர்ணபுர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்துல வர்ணபுர
Bandula Warnapura
බන්දුල වර්ණපුර
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பந்துல வர்ணபுர
பிறப்புமார்ச்சு 1, 1953(1953-03-01)
இரம்புக்கணை, இலங்கை
இறப்புஅக்டோபர் 18, 2021(2021-10-18) (அகவை 68)
கொழும்பு, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர
பங்குபன்முக வீரர்
உறவினர்கள்உபாலி வர்ணபுர (சகோ),
மாதவ வர்ணபுர (மகன்),
மலிந்த வர்ணபுர (மருமகன்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 10)17 பெப்ரவரி 1982 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு17 செப்டம்பர் 1982 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)7 சூன் 1975 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப26 செப்டம்பர் 1982 எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–1991புளூம்ஃபீல்டு
நடுவராக
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 4 12 57 33
ஓட்டங்கள் 96 180 2,280 579
மட்டையாட்ட சராசரி 12.00 15.00 25.05 19.30
100கள்/50கள் 0/0 0/1 2/10 1/3
அதியுயர் ஓட்டம் 38 77 154 106
வீசிய பந்துகள் 90 414 1,211 1,018
வீழ்த்தல்கள் 0 8 13 21
பந்துவீச்சு சராசரி 39.50 48.30 37.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/42 2/33 3/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 5/– 23/– 13/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 31 சனவரி 2009

பந்துல வர்ணபுர (Bandula Warnapura, மார்ச் 1, 1953 – 18 அக்டோபர் 2021), முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட வீரரும், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 1975 முதல் 1982 வரை 4 தேர்வுப் போட்டிகளிலும், 12 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் வலக்கை ஆரம்பத் மட்டையாட்டம், வலக்கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளரும் ஆவார்.

வர்ணபுர இலங்கையின் முதலாவது தேர்வுப் போட்டியைத் தலைமை தாங்கி நடத்தினார். முதல் தேர்வுப் போட்டியின் முதல் பந்தை எதிர்கொண்டு இலங்கைக்கான முதலாவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[1] இவர் 4 தேர்வுப் போட்டிகளில் தலைமை தாங்கியிருந்தாலும், எப்போட்டியையும் வெல்ல முடியவில்லை. ஆனாலும், இவர் தலைமை தாங்கிய முதலாவது ஒருநாள் போட்டி இலங்கைக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

பிந்தைய வாழ்க்கை[தொகு]

இலங்கை அணியின் பயிற்சியாளராக பந்துல பணியாற்றினார். அத்துடன், அதன் நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கினார். இவர் ஆசியத் துடுப்பாட்ட அவையின் அதிகாரியாகவும் பணியாற்றினார்.[2]

2021 அக்டோபரில், நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இவரது இடது காலை நீக்க வேண்டியிருந்தது[3] 2021 அக்டோபர் 18 இல், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் தனது 68-வது அகவையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்துல_வர்ணபுர&oldid=3561850" இருந்து மீள்விக்கப்பட்டது