உள்ளடக்கத்துக்குச் செல்

பந்தன் அந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பந்தன் அந்தாதி என்னும் நூல் ஔவையாரால் பாடப்பட்டது என அந்த நூலின் குறிப்பு கூறுகிறது. [1] அந்த நூலின் உள்ளே வரும் பாடல்களை எண்ணிப் பார்க்கும்போது இந்த நூல் எந்த ஔவையாராலும் பாடப்படவில்லை என்பது தெளிவாகும். இந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பிடுகிறது. [2] இதனால் ஔவையார் பெயரில் யாரோ ஒரு புலவர் இந்த நூலைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

  • இந்த நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், 100 வெண்பாக்களும் உள்ளன.
  • இயல் வணிகன் பந்தனைப்போல் ஒப்பு ஆரே சொல்வீர் [3] என ஔவை இவனைப் புகழ்ந்துள்ளார்.
  • துரை என்னும் ஆங்கிலேயர் காலச் சொல் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. [4]

கதை

நாகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன். [5] இவன் நாகன் பந்தன் எனவும் போற்றப்படுகிறான். [6] இவனது தந்தை நாகந்தை [7]. பந்தன் நாகலோகம் சென்று வாணிகம் செய்தான். அப்போது அவனுக்கு நாகராசன் பெருஞ் செல்வத்தோடு இரண்டு அரிய பொருள்களையும் அளித்தான். போர்த்திக்கொண்டால் இளமை மாறாதிருக்கும் பொன்னாடை ஒன்று. உண்டவர் நீடூழி காலம் வாழச்செய்யும் நெல்லிக்கனி மற்றொன்று. பொன்னாடையை ஔவைக்குக் கொடுத்ததுடன் நெல்லிக்கனியில் பாதியைத் தான் தின்றுவிட்டு, மீதிப் பாதியையும் ஔவைக்குக் கொடுத்தான்.
பெற்று மகிழ்ந்த ஔவை
பந்தனந்தாதி
பந்தன் நவமணிமாலை [8]
ஆகிய நூல்களைப் பாடினார்.

கருவிநூல்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. புஷ்பரதச் செட்டியார் பதிப்பு 1890
  2. நற்கவி சொல் ஔவைக்கு அருள் புரிந்த நாகந்தை பாடல் 15
  3. பாடல் 34
  4. சொல்லுக்கு அவனே துரை பாடல் 34
  5. கூடல் தமிழ்ச்சங்கம் கொண்டாடும் கோவணிகன் மாடப் புகார் நீடு மாநாகன் பாடல் 69
  6. புகார் வணிகன் மாநாகன் பந்தன் பாடல் 22
  7. (நாகன்+தந்தை)
  8. இந்த நூலைப் பற்றிய வேறு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தன்_அந்தாதி&oldid=1241095" இலிருந்து மீள்விக்கப்பட்டது