பத்லபெனுமரு

ஆள்கூறுகள்: 16°17′07″N 80°54′27″E / 16.285396°N 80.907471°E / 16.285396; 80.907471
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்லபெனுமரு
ஊர்
பத்லபெனுமரு is located in ஆந்திரப் பிரதேசம்
பத்லபெனுமரு
பத்லபெனுமரு
ஆந்திராவில் அமைவிடம்
பத்லபெனுமரு is located in இந்தியா
பத்லபெனுமரு
பத்லபெனுமரு
பத்லபெனுமரு (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°17′07″N 80°54′27″E / 16.285396°N 80.907471°E / 16.285396; 80.907471
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருஷ்ணா
பரப்பளவு[1]
 • மொத்தம்11.66 km2 (4.50 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,016
 • அடர்த்தி260/km2 (670/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்521138
அருகிலுள்ள நகரம்விசயவாடா

பத்லபெனுமரு (Bhatlapenumarru) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். இது மச்சிலிபட்டினம் வருவாய் பிரிவின் மோவ்வா மண்டலத்தில் அமைந்துள்ளது.[1]

நிலவியல்[தொகு]

பத்லபெனுமரு, 16.4500° வடக்கிலும் 80.7833 ° கிழக்கிலும் அமைந்துள்ளது . [2] இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 5 மீ (19 அடி) உயரத்தில் உள்ளது. [3]

புள்ளிவிவரம்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1581 ஆண்களும், 1625 பெண்களும் என மொத்தமாக 3206 என்ற அளவில் இருந்தனர்.[4]இந்த கிராமம் 1166 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தில் 1,495 ஆண்களும், 1,521 பெண்களும் என 3,016 பேர் வசிக்கின்றனர்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

மோவாவின் குச்சிபுடியில் இருந்து சாலை போக்குவரத்து வசதி உள்ளது. விசயவாடா தொடர்வண்டி நிலையம் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இவ்வூரின் பிரபலங்கள்[தொகு]

இந்திய சுதந்திரப் போராளியும், இந்திய தேசியக் கொடியின் வடிவமைப்பாளருமான பிங்கலி வெங்கையா (ஆகஸ்ட் 2, 1878 - ஜூலை 4, 1963) இந்தக் கிராமத்தில் பிறந்தார். [5] [6] இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த இவருக்கு கௌரவம் அளிக்கும் விதமாக, கிராமத்திலுள்ள நூலகத்திற்கு எதிரில் இவருக்குச் சிலை அமைக்கப்பட்டது. [7]

அருச்சுனா விருது வென்ற காமினேனி ஈசுவர ராவும் இந்த கிராமத்தில் பிறந்தார். [8] [9] 1954 மூத்தோர் தேசியப் போட்டிகளில் இவர் "இந்தியாவின் வலிமையான மனிதர்" என்று தேர்வு செய்யப்பட்டார். மேலும் அமெரிக்கப் பயிற்சியாளர் பாப் ஹாஃப்மேன் இவரை "பவர்ஹவுஸ்" என்று குறிப்பிட்டார் . [10] இவர் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகள், 1960 உரோம் ஒலிம்பிக் போட்டிகள், முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (1951) ஆகியவற்றில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2007இல் இறந்த இவரை கௌரவிக்கும் விதமாக 2009ஆம் ஆண்டில் குச்சிபுடி அருகிலுள்ள பெத்தபுடியில் "சிறீகாமினேனி" என்ற உடற்பயிற்சிக் கூடம் நிறுவப்பட்டது. [11]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்லபெனுமரு&oldid=3589465" இருந்து மீள்விக்கப்பட்டது