உள்ளடக்கத்துக்குச் செல்

பத்ர மாருதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ர மாருதி கோயில்
பத்ர மாருதி கோயிலின் பக்கவாட்டுத் தோற்றம்
பத்ர மாருதி கோயில் is located in மகாராட்டிரம்
பத்ர மாருதி கோயில்
மகாராட்டிரம் மாநிலத்தில் பத்ர மாருதி கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரம்
மாவட்டம்:சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம்
அமைவு:குல்தாபாத்
ஏற்றம்:725 m (2,379 அடி)
ஆள்கூறுகள்:20°00′34″N 75°11′47″E / 20.00944°N 75.19639°E / 20.00944; 75.19639
கோயில் தகவல்கள்

பத்ர மாருதி கோயில் (Bhadra Maruti Temple), மேற்கு இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் பத்திராவதி எனப்படும் குல்தாபாத் நகரத்தில் உள்ளது. இக்கோயில் அனுமனுக்கு அர்பணிக்கப்பட்டது.[1][2]இக்கோயில் எல்லோரா குடைவரையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[3]இக்கோயிலிலின் கருவறையில் அனுமன் தூங்கும் கோலத்தில் காணப்படுகிறார்..[2]

வரலாறு

[தொகு]

முகலாயப் பேரரசு காலத்தில் இக்கோயில் இடிக்கப்பட்டாலும், பொதுமக்கள் மூலவரான அனுமன் விக்கிரகத்தை பாதுகாத்து வைத்தனர். 1960ஆம் ஆண்டுகளில் பொதுமக்கள் பளிங்கு கற்களால் புதிய அனுமன் கோயிலைக் கட்டினர். மேலும் இக்கோயிலில் சீதை மற்றும் இலட்சுமணனுடன் கூடிய இராமர் சன்னதி உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhadra Maruti - Discover Aurangabad". Archived from the original on 2015-07-10.
  2. 2.0 2.1 "Bhadra Maruti Temple : Vayusutha".
  3. Harding, Paul; Horton, Patrick; Eberle, Janine; Karafin, Amy; Richmond, Simon (2005). South India. Lonely planet. p. 133. ISBN 978-1-74104-165-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ர_மாருதி_கோயில்&oldid=4232231" இலிருந்து மீள்விக்கப்பட்டது