பத்ம விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு, பணம் எதுவும் கிடையாது. பட்டம் மாதிரி இவற்றை பெயரோடு சேர்த்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான விழா நடத்தி அரசு இவ்விருதை வழங்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சா. கந்தசாமி (28 நவம்பர் 2013). "விருதுகள் பலவிதம்". தினமணி. பார்த்த நாள் 28 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_விருதுகள்&oldid=1611066" இருந்து மீள்விக்கப்பட்டது