பத்மினி மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்மினி மூர்த்தி (Padmini Murthy) என்பவர் நியூயார்க் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர், பேராசிரியர் மற்றும் உலகளாவிய சுகாதார இயக்குநர் ஆவார். மருத்துவத்தில் பெண்களின் பங்களிப்பிற்காக 2016ஆம் ஆண்டில் அமெரிக்கப் பெண்கள் மருத்துவ சங்கத்தால் எலிசபெத் பிளாக்வெல் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கை குறிப்புகள்[தொகு]

பத்மினி மூர்த்தி தகுதி வாய்ந்த மருத்துவர். இவர் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள குண்டூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்விப் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றார்.[1] இவர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் மருத்துவ மேல் படிப்பு படித்துள்ளார்.[2]

இவர் பொது உடல்நலவியலில் முதுநிலைப் பட்டத்தினையும் மேலாண்மையில் முதுகலைப் பட்டத்தினையும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். மேலும், தேசிய சுகாதார கல்வி நற்சான்றிதழ்க்கான தேசிய ஆணையத்தில் சான்றளிக்கப்பட்ட சுகாதார கல்வி நிபுணராகவும் உள்ளார்.[1]

பத்மினி மூர்த்தி 2010ஆம் ஆண்டில் பெண்கள் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் என்ற புத்தகத்தினை எழுதிய ஆசிரியர் ஆவார்.[2] 2020ஆம் ஆண்டு தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொது சுகாதாரம் எனும் இவருடைய புத்தகமான இசுபிரிங்கரால் வெளியிடப்பட்டது

இவர் ஐக்கிய நாடுகளின் அரசு சாராக் குழுக்களிலும் சேவையாற்றி வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[3] இவர் தொடர்ந்து மூன்று முறை அமெரிக்க பொதுச் சுகாதார சங்கத்தின் பெண்கள் உரிமைக்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.[4]

பத்மினி தற்போது நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் சுகாதார கொள்கை மற்றும் மேலாண்மை மற்றும் குடும்பம் மற்றும் சமூக மருத்துவம் மற்றும் உலகளாவிய சுகாதார இயக்குநராகவும் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.[5]

விருதுகளும் கவுரவங்களும்[தொகு]

பத்மினி மூர்த்தி 2010இல் நியூயார்க் மருத்துவ சகாக்களின் குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.[5]

மருத்துவம், கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றில் சாதனை புரிந்ததற்காக மூர்த்தியினை, யார் யார் எனும் பன்னாட்டுக் கூட்டமைப்பின் சார்பில் 2015ஆம் ஆண்டின் சிறந்த நிபுணராகத் தேர்ந்தெடுத்தது. இவருக்கு 2013ஆம் ஆண்டில் மேரி கேட்சத்தூர் நினைவு விருதும், 2016ஆம் ஆண்டில் மருத்துவர் லதா பாட்டீல் தொடக்க உரை விருது மற்றும் மருத்துவர் ஹோமி கொலாபவல்லா சொற்பொழிவு விருதும் வழங்கப்பட்டது. சமூக சேவையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு வழங்கப்பட்ட சோஜர்னர் ட்ரூத் பின் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஜிராட் சொற்பொழிவாளர் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.[6]

2016இல் மூர்த்திக்கு எலிசபெத் பிளாக்வெல் பதக்கத்தமான மிக உயரிய விருதான இவருடைய சேவையைப் பாராட்டி அமெரிக்கப் பெண் மருத்துவச் சங்கத்தினால் வழங்கப்பட்டது. இந்த விருதானது ஆண்டுதோறும் பெண் மருத்துவரின் பணியினை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.[5]

ஆத்திரேலியாவின் நோட்ரே டேம் பல்கலைக்கழகம் இவருக்குத் தொழில்முறை வழிகாட்டி விருதினை 2018ஆம் ஆண்டு வழங்கியது. மனித உரிமைகளுக்கான தைவானிய மருத்துவ மகளிர் சங்க விருது 2019ஆம் ஆண்டு இவரின் சமூக சேவையினை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டது. சிட்னி மருத்துவ பள்ளியும் இவருக்கு 2019ல் விருது வழங்கியது.[7]

2020இல் இந்தியாவில் பெங்களூருவில் உள்ள மகளிர் பொருளாதார அமைப்பு, அனைவருக்குமான சிறந்த உலகை உருவாக்கச் சேவையாற்றுவதற்காகப் பத்மினி மூர்த்திக்குப் புகழ்பெற்ற பெண் என்ற விருதினை வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Padmini Murthy MD, MPH, MS, CHES, MPhil, FAMWA" (in en-US). https://www.amwa-doc.org/faces/padmini-murthy-md-mph-ms-ches-mphil/. 
  2. 2.0 2.1 "Prof. Dr. Padmini Murthy | The Medical Women's International Association (MWIA)". mwia.net (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
  3. "Padmini Murthy - WEF" (in en-US). http://www.wef.org.in/padmini-murthy/. 
  4. College, New York Medical. "Padmini Murthy, M.D., M.P.H., M.S., FAMWA, FRSPH". www.nymc.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-22. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
  5. 5.0 5.1 5.2 "Fellows News: Padmini Murthy, MD, MPH to Receive AMWA Blackwell Medal | New York Academy of Medicine". nyam.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-22. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20."Fellows News: Padmini Murthy, MD, MPH to Receive AMWA Blackwell Medal | New York Academy of Medicine" பரணிடப்பட்டது 2018-10-22 at the வந்தவழி இயந்திரம். nyam.org. Retrieved 2018-10-20.
  6. "Dr. Padmini Murthy Is Named Professional of the Year by the International Assoc. of Who's Who". Market Wired. 31 August 2015. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  7. College, New York Medical. "Padmini Murthy, M.D., M.P.H., M.S., FAMWA, FRSPH". www.nymc.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2021-09-13. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_மூர்த்தி&oldid=3619060" இலிருந்து மீள்விக்கப்பட்டது