பத்மினி சேத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மினி சேத்தூர்

பத்மினி சேத்தூர் (Padmini Chettur பி.1970) இந்தியாவைச் சேர்ந்த இக்காலகட்டத்தைச் சேர்ந்த நாட்டியக்கலைஞர். புகழ்பெற்ற பாரம்பரிய நாட்டியக்கலைஞரான சந்திரலேகாவிடம் பயிற்சி பெற்றவர். சென்னையில் பத்மினி சேத்தூர் நாட்டிய நிறுவனம் (Padmini Chettur Dance Company)என்ற அமைப்பினை வைத்து நடத்தி வருகிறார்.[1][2][3]

ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

1970இல் பிறந்த இவர், குழந்தையாக இருக்கும்போதே பரத நாட்டியம் கற்றுக்கொண்டார். 1991இல் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.[4]

வாழ்க்கை[தொகு]

அவர் தன்னுடைய தற்கால சோதனை முயற்சியை 1989இல் அரங்கேற்றினார்.[5]

அறிவியல் கற்கச் சென்றாலும்கூட சந்திரலேகாவைச் சந்தித்தபின்னர் அவருடைய ஆர்வம் நடனத்தை நோக்கித் திரும்பியது. அப்போது ஆரம்பித்த அவருடைய பயணமானது, அவரை நடனத்தில் அறிவியல் உத்திகளைக் கொணர உதவியது.[6] சந்திரலேகாவால் நடத்தப்பட்ட நாட்டிய நிறுவனத்தில் 1991இல் சேர்ந்த இவர், 2001 வரை அவருடன் இணைந்து ‘லீலாவதி,’ ‘ப்ராணா,’ ‘அங்கீகா,’ ‘ஸ்ரீ,’ ‘பின்ன பிரவாஹா,’ ‘யந்த்ரா,’ ‘மகாஹால்’ மற்றும் ‘சரீரா’ போன்றவற்றில் செயலாற்றினார்.[7][8] அதே காலகட்டத்தில் தனித்த நிலையில் விங்ஸ் அன்ட் மாஸ்க்ஸ்(1999) நிகழ்ச்சியை நடத்தினார். அடுத்து பிரவுன், அன்சங்க், ஃப்ராகிலிடி (2001) – குழுவின் படைப்பு, மற்றும் சோலோ (2003) மூன்று பிரிவுகள் போன்றவற்றை நடத்தினார். அடுத்து குழுவாகத் தயாரித்தது பேப்பர்டால். அவருடைய தயாரிப்பான புஷ்ட், 2006இல் நடைபெற்ற சியோல் நிகழ்த்துக்கலை விழாவில் திரையிடப்பட்டது [9] அவர் புருசேல்ஸ், ஹாலந்து, சால்ஸ்பர்க், பாரிஸ் மற்றும் லிஸ்பன் போன்ற இடங்களுக்குப் பயணித்துள்ளார்.[7] பியூட்டிஃபுல் திங் 1 மற்றும் பியூட்டிஃபுல் திங் 2 ஆகியவை முறையே குழு, தனி என்ற இரு நிலையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் உடல் மற்றும் வெளியில் அழகு பற்றிய உணர்வுகளைக் காணமுடிந்தது. இவை இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பல இடங்களில் அரங்கேறின. அவருடைய அடுத்த முயற்சி வால் டான்சிங் [10] என்பதாகும். குழுவாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி சற்றே வித்தியாசமானதாகும். உடல் சார்ந்த நிலை என்பதை மற்றவற்றோடு தொடர்புபடுத்தும் நிலையிலும், வெளியோடு தொடர்புபடுத்தும் நிலையிலும் அமைந்தது. நாடக முகப்பு இன்றி மேற்கொள்ளப்பட்ட அவருடைய முதல் முயற்சியாகும். இந்தியாவிலும், வியன்னா மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் இது அரங்கேற்றப்பட்டது. வால் டான்சிங் தயாரிப்பில் அவர் ஈடுபட்டபோது, பிரெஞ்சு பயிற்சியாளருடன் [11] இணைந்து, அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாக கோலம் நடன நிகழ்ச்சியைப் படைத்தார். இந்த நடன வடிவில் ஒரு பெரிய கம்பள விரிப்பில் கோலம் போடப்பட்டிருக்கும். குழுவாக இணைந்து தொலைவு என்பதான பொருண்மையில் உள்ள நடன வகையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். தற்காலிக நடைமுறைக்கேற்றவாறும் தற்போதைய சமூக பண்பாட்டு நிலைக்கேற்றவாறு அமையும் வகையிலும் அதனை உருவாக்கி வருகிறார்.

இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் சில நாடுகளில் வசிக்கும் கலைஞர் என்ற நிலையில் இருந்து வருகிறார். ப்ரீத்தி ஆத்ரேயா மற்றும் நடிகர் பிரவிண் கண்ணனூர் ஆகியோருடன் இணைந்து, சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு, பேஸ்மெண்ட் 21 [12] என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

 • விங்ஸ் அன்ட் மாஸ்க்ஸ் (Wings and Masks) (தயாரிப்பு/நடிப்பு, 1999)
 • ஃப்ராகிலிடி(Fragility) (தயாரிப்பு/நடிப்பு, 2001)
 • சோலோ (Solo) (தயாரிப்பு/நடிப்பு, 2003)
 • பேப்பர்டால் (Paperdoll) (தயாரிப்பு/நடிப்பு, 2005)
 • புஷ்ட் (Pushed) (தயாரிப்பு/நடிப்பு, 2006)[13]
 • பியூட்டிஃபுல் திங் 1 (Beautiful Thing 1)(தயாரிப்பு/நடிப்பு, 2009)
 • பியூட்டிஃபுல் திங் 2 (Beautiful Thing 2)(தயாரிப்பு/நடிப்பு, 2011)
 • வால் டான்சிங் (Wall Dancing) (தயாரிப்பு/நடிப்பு, 2012)[14]
 • கோலம்(Kolam) (டேவிட் ரோலண்ட் உடன் இணைந்து) (தயாரிப்பு/நடிப்பு, 2014)
 • வர்ணம் (Varnam) (தயாரிப்பு/நடிப்பு, 2016) [15]

வர்ணம் நிகழ்வில் தனித்த ஒரு வெளிப்பாட்டு முறையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். வர்ணத்தில், சாஹித்யம் பகுதியில் புகழ்பெற்ற ஒரு பாடலைப் பயன்படுத்தியுள்ளார். நிகழ்வின்போது அதன் ஒரு பகுதியை மொழிபெயர்த்து இணைத்துள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

 1. Swaminathan, Chitra (22 November 2008). "Beyond boundaries". The Hindu. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2010.
 2. Venkatraman, Leela (22 January 2010). "Is collaboration the new age mantra?". The Hindu. Archived from the original on 31 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 13 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. "Celebrating the creative spirit". The Hindu. 26 November 2001. Archived from the original on 19 அக்டோபர் 2003. பார்க்கப்பட்ட நாள் 13 February 2010.
 4. "Notable Alumni". BITS Alumni Association. பார்க்கப்பட்ட நாள் 13 February 2010.
 5. O'Shea, Janet (2007). At Home in the world: Bharata natyam on the Global stage. Wesleyan University Press. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8195-6837-6. https://books.google.com/books?id=4CfA4uDwCKwC&pg=PA17&dq=PADMINI+CHETTUR&hl=en&ei=cJjsTLvRM8_JcdGS4IAP&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCkQ6AEwAQ#v=onepage&q=PADMINI%20CHETTUR&f=false. 
 6. 6.0 6.1 Experimenting with tradition, Deccan Chronicle, 19 December 2016
 7. 7.0 7.1 "Beyond boundaries". The Hindu. Nov 22, 2008 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108104045/http://www.hindu.com/mp/2008/11/22/stories/2008112253930900.htm. பார்த்த நாள்: 24 November 2010. 
 8. "You in the third row, wake up!". Tehelka Magazine. Vol 7, Issue 47, Dated November 27, 2010. Archived from the original on 29 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 November 2010. {{cite web}}: Check date values in: |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
 9. "Dance Review: Pushed – A unique Indo-Korean dance venture". Nartaki. 27 December 2006.
 10. Swaminathan, Chitra (2012-11-30). "Writing on the wall" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-dance/writing-on-the-wall/article4150499.ece. 
 11. David Rolland
 12. Basement 21
 13. Pushed
 14. Wall dancing
 15. Varnam

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_சேத்தூர்&oldid=3577704" இலிருந்து மீள்விக்கப்பட்டது