பத்மா ஹெஜ்மாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்மா ஹெஜ்மாடி, இந்தியாவில் பிறந்த ஆங்கில மொழி எழுத்தாளரும் புகைப்படக் கலைஞரும், காட்சிக் கலைஞருமாவார், இவர் பத்மா பெரேரா என்ற புனைப்பெயரிலும் பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

பத்மா ஹெஜ்மாடி, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். [1] டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டபடிப்பையும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ள இவர், அங்கே புனைகதைக்கான ஹாப்வுட் விருதை வென்றுள்ளார். [2]

பத்மா, வாசர் கல்லூரி, கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரோட் ஐலண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைன் ஆகியவற்றில் கபல்வேறு வாசிப்பு கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கங்குகளை நடத்தியுள்ளார், மேலும் போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி கற்பித்துள்ளார். தி நியூ யார்க்கர், தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் மற்றும் தி அயோவா ரிவ்யூ போன்ற பிரபல ஆங்கில பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் மற்றும் கதைகளையும் பத்மா எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது 1985 ஆண்டில் வெளியான சிறுகதைத் தொகுப்பான, பிறந்த நாள், இறப்பு நாள் என்பது, 1974 ஆம் ஆண்டு முதல் இவரால் எழுதி வெளியிடப்பட்ட பன்னிரண்டு கதைகளின் தொகுப்பாகும். எட்டு கதைகள் இந்தியாவில் மேல்தட்டு குடும்ப வாழ்க்கையைப்பற்றி வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. மற்ற நான்கு கதைகள் வட அமெரிக்காவில் நடைபெறும் கலாச்சார இடப்பெயர்வு மற்றும் நாடுகடத்தலைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளன.

படைப்புகள்[தொகு]

பத்மா பெரேராவாக
  • வான்டேஜ் நாணயங்கள் . கல்கத்தா: எழுத்தாளர் பட்டறை, 1972.
  • ஆங்கிலத்தில் இந்திய புனைகதைகளின் சவால் . அல்பானி, NY: டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம், 1975.
  • டாக்டர். சலாம் மற்றும் இந்தியாவின் பிற கதைகள் . சாண்டா பார்பரா: காப்ரா, 1978.
  • பிறந்த நாள், இறப்பு மற்றும் பிற கதைகள் . லண்டன்: பெண்கள் அச்சகம், 1985.
பத்மா ஹெஜ்மாடியாக
  • பறப்பதற்கு அறை: ஒரு கலாச்சார நினைவுக் குறிப்பு . பெர்க்லி: யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பிரஸ், 1999.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lakshmi Holmström; J. H. E. Paine; Corinne H. Dale (1999). "Flight and Arrival: A Study of Padma Hejmadi's Short Story, "Weather Report"". Women on the Edge: Ethnicity and Gender in Short Stories by American Women. Psychology Press. பக். 53–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8153-3247-3. https://books.google.com/books?id=6llWqBg0RG0C&pg=PA53. 
  2. Fister, Barbara (1995). "Perera, Padma". Third World Women's Literatures: A Dictionary and Guide to Materials in English. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-28988-0. https://books.google.com/books?id=eRievpkUWQkC&pg=PA239. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_ஹெஜ்மாடி&oldid=3678273" இலிருந்து மீள்விக்கப்பட்டது