பத்மா விஸ்வநாதன்

பத்மா விஸ்வநாதன் (Padma Viswanathan, பிறப்பு 1968 நெல்சன், பிரிட்டிஷ் கொலம்பியா ) [1] என்பவர் ஒரு தமிழ் கனடிய நாடகாசிரியர், புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தன்வரலாற்று எழுத்தாளர் ஆவார். இவர் ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார், அங்கு இவர் படைப்பிலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புக்கான எம்.எப்.ஏ பட்டப்படிப்புத் திட்டத்தில் கற்பிக்கிறார்.
பிரேசிலிய எழுத்தாளர் அனா பாலா மாயா போர்ச்சுகீசிய மொழியில் 2017 இல் எழுதிய அசிம் நா டெர்ரா கோமோ எம்பைக்ஸோ டா டெர்ரா என்ற புதினத்தை பத்மா ஆன் எர்த் ஆஸ் இட் இஸ் பினீத் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு நூல் 2026 ஆண்டு சர்வதேச புக்கர் பரிசுக்கான இறுதி பட்டியலில் இடம்பெற்றது. [2] [3]
வாழ்க்கை
[தொகு]பத்மா ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், மேலும் 2004-ல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் எழுத்து பயிலரங்கிலிருந்து முதுகலைப் பட்டத்தையும், 2006-இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.எப்.ஏ பட்டத்தையும் பெற்றார்.
இவருடைய சிறுகதைகள் சப்ட்ராபிக்ஸ், நியூ லெட்டர்ஸ், பிரிசம் இன்டர்நேஷனல், பாஸ்டன் ரிவியூ , மாலஹாட் ரிவியூ ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.
இவர், தன் கணவரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஜெஃப்ரி பிராக் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளுடன், ஆர்கன்சாஸின் ஃபேட்வில் நகரில் வசித்துவருகிறார்.
விருதுகள்
[தொகு]பத்மாவின் 'டிரான்ஸ்சடரி சிட்டிஸ்' என்ற சிறுகதை, 2007-ஆம் ஆண்டு ஜார்ஜ் சாண்டர்ஸ் நடுவராகக் கொண்டு நடைபெற்ற 14-வது வருடாந்திர பாஸ்டன் ரிவியூ சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றது.
இவருடைய தி எவர் ஆஃப்டர் ஆஃப் அஷ்வின் ராவ் என்ற புதினம் , ஸ்கோஷியாபேங்க் கில்லர் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
2017-ல் அவர் ஆர்கன்சாஸின் போர்ட்டர் பரிசை பெற்றார்.
படைப்புகள்
[தொகு]சிறுகதைகள்
[தொகு]- "Transitory Cities". Boston Review. 22 June 2012. http://bostonreview.net/padma-viswanathan-transitory-cities.
- "The Barber Lover". AGNI Online. 15 April 2023. http://www.bu.edu/agni/fiction/online/2006/viswanathan.html.
- "Better Protect America". Granta. March 2017. https://granta.com/better-protect-america/.
புதினங்கள்
[தொகு]- The Toss of a Lemon. Random House, Inc. 2008. ISBN 978-0-307-35632-1., takes place in South India in the first half of the twentieth century.
- The Ever After of Ashwin Rao. Random House, Inc. 2014. ISBN 978-0-307-35634-5., explores the aftermath of the 1985 bombing of an Air India flight.
- Like Every Form of Love. Random House, Inc. 2023. ISBN 9781039006218., a memoir of friendship and true crime.
நாடகங்கள்
[தொகு]- "House of Sacred Cows," originally produced by Northern Light Theatre in Edmonton and later published in the volume Ethnicities: Plays from the New West (1999)
- "By Air, By Water, By Wood", Frog and Nightgown Productions 2000, published South Asian Review, 2008
வானொலி நாடகங்கள்
[தொகு]- "Disco Does Not Suck", CBC Radio, 1999
தொகுப்புகள்
[தொகு]- Anne Nothof; Padma Viswanathan; Marty Chan; Jonathan Christenson (1999). Anne Nothof (ed.). Ethnicities: Plays from the New West. NeWest Press. ISBN 978-1-896300-03-0.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- português (pt) by Graciliano Ramos, New York Review Books Classics, 2020[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elizabeth Lumley, ed. (2003). Canadian Who's Who 2003. University of Toronto Press. ISBN 978-0-8020-8865-9.
- ↑ "The International Booker Prize 2026". The Booker Prizes. Retrieved 25 February 2026.
- ↑ Creamer, Ella (24 February 2026). "Witches, Nazi collaborators and banned books: International Booker prize announces 2026 longlist". The Guardian. Retrieved 25 February 2026.
- ↑ "São Bernardo". 5 May 2020.