உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மா பந்தோபாத்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மா பந்தோபாத்யா
பத்மா பந்தோபாத்யா
பிறப்பின்போதான் பெயர்பத்மாவதி சுவாமிநாதன்
பட்டப்பெயர்(கள்)பத்மா
பிறப்பு4 நவம்பர் 1944 (1944-11-04) (அகவை 79)
திருப்பதி, ஆந்திரா
சார்புஇந்தியா
சேவை/கிளைவான்படை, இந்தியா
தரம் Air Marshal
துணை(கள்)Sati Nath Bandopadhyay (m. 1968–2015; his death)
பிள்ளைகள்2

ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யா, (Padma Bandopadhyay) என்பார் பி.வி.எஸ்.எம் (பரம் விசிட்ட சேவா பதக்கம்), ஏ.வி.எஸ்.எம் (அதி விசிட்ட சேவா பதக்கம்), வி.எஸ்.எம் (விசிட்டா சேவா பதக்கம்) (பிறப்பு 4 நவம்பர் 1944) உள்ளிட்ட பதக்கங்கள் பெற்ற இந்திய வான் படையின் முன்னாள் அதிகாரி ஆவார். இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். லெப்டினன்ட் ஜெனரல் புனிதா அரோராவுக்குப் பிறகு, இந்திய ஆயுதப் படையில் மூன்று நட்சத்திர பதவிக்கு உயர்த்தப்பட்ட இரண்டாவது பெண் இவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பந்தோபாத்யா 1944ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ஆந்திராவின் திருப்பதியில் பிறந்தார். பத்மா தனது குழந்தைப் பருவத்தின்போது காசநோயால் படுக்கையிலிருந்த தாயிற்கு சேவை செய்யும் நிலையில் தள்ளப்பட்டார் புது தில்லி. கோலே சந்தையில் இவரது இல்லத்திற்கு அருகே வசித்துவந்த லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ். ஐ. பத்மாவதியின் ஆரம்பக்கால உந்துதல்கள் இவர் மருத்துவரானார். [1]

கல்வி

[தொகு]

இவர் டெல்லி தமிழ்க் கல்வி சங்கத்தின் முதுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் கலை பாடப் பிரிவில் படித்தார். பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவிலிருந்து அறிவியல் பிரிவிற்கு மாறுவதில் உள்ள கடினத்தினை உணர்ந்தார். எனவே இவர் கிரோரி மால் கல்லூரியில் மருத்துவம் முன்படிப்பினைப் பயின்ற பின்னர் 1963ல் புனேவில் உள்ள இராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

பணி

[தொகு]

1968ல் இந்திய வான்படையில் சேர்ந்த இவர், சக விமானப்படை அதிகாரியான எஸ்.என்.பந்தோபாத்யாயை மணந்தார்.[2] இவருக்கு விசிட்ட சேவா பதக்கம் (விஎஸ்எம்மும்) [3] 1971ல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது இவரது நடத்தைக்காக வழங்கப்பட்டது. . குடியரசுத் தலைவர் விருதைப் பெற்ற முதல் இந்திய வான்படைத் தம்பதியினர் இவர்களாவார்கள். [4]

இந்திய விண்வெளி மருத்துவ சங்கத்தின் சக உறுப்பினராகவும், வடதுருவத்தில் அறிவியல் ஆராய்ச்சி நடத்திய முதல் இந்தியப் பெண்ணும் இவராவார்.[5] 1978ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவைப் பணியாளர்கள் கல்லூரியில் கல்வி பயின்ற முதல் பெண் ஆயுதப்படை அதிகாரியும் இவரே. [6] இவர் விமானத் தலைமையகத்தில் இயக்குநர் பொது மருத்துவ சேவைகள் (ஏர்). [7] 2002 ஆம் ஆண்டில், ஏர் வைஸ் மார்ஷலாக (இரண்டு நட்சத்திர தரவரிசை) பதவி உயர்வு பெற்று அப்பதவியின் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் இவர் இந்திய விமானப்படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் ஆனார். பந்தோபாத்யாய் ஒரு விமான மருத்துவ நிபுணர் மற்றும் நியூயார்க் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் சேர்ந்தார்.[8]

இராணுவ விருதுகள் மற்றும் அலங்காரங்கள்

[தொகு]
அடி விசிசாட் சேவா விருது விசிட் சேவா விருது பச்சிமி விருது
சங்கிராம் விருது
ஆப்ரேசன் விஜய் விருது
உயர்பிரதேச சேவை விருது
50வது சுதந்திர தின விருதுl
25வது இந்திய சுதந்திர தின விருது
30 ஆண்டுகால சேவைக்கான விருது
20 ஆண்டுகால சேவைக்கான விருது
9 ஆண்டுகால சேவைக்கான விருது

விருதுகளும் கவுரவமும்

[தொகு]
  • விஷிஸ்ட் சேவா பதக்கம், ஜனவரி 1973
  • இந்திரா பிரியதர்ஷினி விருது
  • அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், ஜனவரி 2002
  • பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம், ஜனவரி 2006
  • பத்மஸ்ரீ விருது, ஜனவரி 2020

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_பந்தோபாத்யா&oldid=3080872" இலிருந்து மீள்விக்கப்பட்டது