பத்மா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்மா நதி

பத்மா நதி ( Padma ) வங்காள தேசத்தின் மிக முக்கிய நதிகளுள் ஒன்றாகும். இது கங்கை நதியின் முக்கிய கிளை நதியாகும். இந்நதி தென்கிழக்கில் 120 கி.மீ. பயணித்து வங்காள விரிகுடாவிற்கு[1] அருகில் மேக்னா நதியுடன் கலக்கிறது. பத்மா என்றால் சமசுகிருதத்தில் தாமரை என்று பொருள். இந்துப் புராணங்களின்படி பத்மா என்பது இந்து கடவுள் இலட்சுமி தேவியின் மறுபெயர் ஆகும். கங்கை நதிக்கு கீழ் பகுதியில் உள்ள அதன் கிளை நதிதான் பத்மா நதியாகும். வங்காள தேசத்தின் ராச்சாகி நகரம் இந்நதிக்கரையின் மீது அமைந்துள்ளது [2]. 1966 ஆம் ஆண்டு முதல் பத்மா நதியின் அரிப்பால் 256 சதுரமைல் நிலப்பரப்பு கிட்டத்தட்ட சிக்காக்கோ நகரத்தின் பரப்பளவு இழக்கப்பட்டுள்ளது [3].

புவியியல்[தொகு]

பத்மா இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்குள் ஜபாய் நபாப்காஞ்ச்-க்கு அருகில் கலக்கிறது. மீண்டும் அரிச்சா என்னுமிடத்தில் யமுனை நதியுடன் கலக்கிறது. அவ்விடத்தில் யமுனையின் பெயாிலேயே அழைக்கப்படுகிறது. சந்த்பூர் அருகில் மேக்னா நதியுடன் கலந்து மேக்னா என்றே அழைக்கப்படுகிறது. பத்மா நதியின் வடகரையில் ராஜ்ஷசி என்ற பொிய நகரம் மேற்கு வங்காளத்தில் உள்ளது.

கங்கை நதி இமாச்சலப்பிரதேசத்தில் கங்கோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியா, வங்காளதேசத்தைக் கடந்து மேற்கு வங்காளத்தை அடைகிறது. கங்கை நதி ஜபாய் நபாப்காஞ்ச் மாவட்டத்தில் வங்காளதேசத்தில் நுழைகிறது. இங்கு கங்கை இரு கிளை நதிகளாகப் பிாிகிறது. அவை பாகிரிதி மற்றும் பத்மா ஆகியன. ஆங்கிலேயர்களால் பாகிாிதி என்ற பெயர் ஹூக்ளியாக மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Allison, Mead A. (Summer 1998). "Geologic Framework and Environmental Status of the Ganges-Brahmaputra Delta". Journal of Coastal Research (Coastal Education & Research Foundation, Inc.) 13 (3): 826–836. 
  2. Hossain ML, Mahmud J, Islam J, Khokon ZH and Islam S (eds.) (2005) Padma, Tatthyakosh Vol. 1 and 2, Dhaka, Bangladesh, p. 182 (in Bengali).
  3. "Over 66,000 hectares lost to Padma since 1967: NASA report". The Daily Star. https://www.thedailystar.net/country/news/over-66000-hectares-lost-padma-1967-nasa-report-1633810. பார்த்த நாள்: September 14, 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_நதி&oldid=2618401" இருந்து மீள்விக்கப்பட்டது