பத்தூர் மலை
பத்தூர் மலை | |
---|---|
Mount Batur Gunung Batur | |
![]() பத்தூர் மலை மற்றும் ஏரி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,717 m (5,633 அடி) |
புடைப்பு | 2,745 m (9,006 அடி) |
பட்டியல்கள் | ரீபு மலைகள் |
ஆள்கூறு | 8°14′20″S 115°22′39″E / 8.23889°S 115.37750°E |
புவியியல் | |
அமைவிடம் | பாங்கிலி பிராந்தியம், பாலி இந்தோனேசியா |
நிலவியல் | |
பாறையின் வயது | ஹோலோசீன் |
மலையின் வகை | சோமிய எரிமலை (Somma volcano) |
கடைசி வெடிப்பு | 1999 - 2000 |
பத்தூர் மலை (ஆங்கிலம்: Mount Batur; இந்தோனேசியம்: Gunung Batur) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் அகோங் மலையின் வடமேற்கே இரண்டு அகன்ற எரிமலைவாய்களின் (Caldera) மையத்தில் அமைந்துள்ள ஒரு செயல்நிலை எரிமலை ஆகும். பத்தூர் மலையின் தென்கிழக்குப் பகுதியில், 10 கீமீ நீளம்; 13 கிமீ அகலத்திற்ற்கு ஓர் எரிமலைப் பெருவாய் ஏரி உள்ளது.[1]
பெரிய எரிமலைப் பெருவாய்; 7.5 கி.மீ நீளமுள்ள சிறிய எரிமலைவாய் ஆகிய இரு எரிமலைவாய்களும்; புவியின் பாறைக் குழம்புகள் (Magma Chamber) உள்வாங்கியதால் உருவாகின என புவியியலாளர்கள் கருதுகின்றனர்.[2] முதல் பெரிய பாறைக் குழம்பு சரிவு சுமார் 29,300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. பத்தூர் மலையின் பெரிய அளவிலான அண்மைய வெடிப்பு 1804-ஆம் ஆண்டும்; மிக அண்மைய வெடிப்பு 2000-ஆம் ஆண்டும் நிகழ்ந்தன.[3]
1963-ஆம் ஆண்டு பத்தூர் மலை மீண்டும் ஒருமுறை சிறிய அளவில் வெடித்தது. அப்போது உருவான எரிமலைக் குழம்புப் பாறைகளை, தற்போது கிந்தாமணி நகரத்திலும் கணிசமான அளவில் பார்க்க முடியும்.[4][2][4]
பொது
[தொகு]பத்தூர் எரிமலையின் முன்னாள் எரிமலைப் பெருவாய்கள், தற்போது மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளாக உள்ளன. அங்குள்ள 15 கிராமங்களில் கெடிசான், சொங்கான், துருன்யான், தோயா பூங்கா ஆகிய நான்கு கிராமங்களும் மிக முக்கியமான கிராமங்களாகும்.
இங்குள்ள உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் தங்களின் வருமானத்திற்காக வேளாண்மையை நம்பியுள்ளனர். அதே வேளையில் சுற்றுலா துறையும் பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.[5]
செப்டம்பர் 20, 2012 அன்று யுனெஸ்கோ, பத்தூர் எரிமலையின் எரிமலைப் பெருவாய்ப் பகுதிகளை உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலையமைப்பின் (Global Geoparks Network) ஒரு பகுதியாக அறிவித்தது.[6][7]
காட்சியகம்
[தொகு]பத்தூர் மலை மலையின் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
[தொகு]- பத்தூர் ஏரி
- எரிமலை வெடிப்பு
- எரிமலை குகை
- கேடய எரிமலை
- சுழல் வடிவ எரிமலை
- தோபா எரிமலை வெடிப்பு
- எரிமலை வெடிப்புத் தன்மை குறியீடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Geiger, Harri; Troll, Valentin R.; Jolis, Ester M.; Deegan, Frances M.; Harris, Chris; Hilton, David R.; Freda, Carmela (2018-07-12). "Multi-level magma plumbing at Agung and Batur volcanoes increases risk of hazardous eruptions" (in en). Scientific Reports 8 (1): 10547. doi:10.1038/s41598-018-28125-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:30002471. Bibcode: 2018NatSR...810547G.
- ↑ 2.0 2.1 "Batur General Information". Global Volcanism Program, National Museum of Natural History. Smithsonian Institution. Retrieved January 16, 2016.
- ↑ Sutawidjaja, Igan S. (June 2014). "Ignimbrite Analyses of Batur Caldera, Bali, based on 14C Dating". Indonesian Journal on Geoscience. doi:10.17014/ijog.vol4no3.20094. https://ijog.geologi.esdm.go.id/index.php/IJOG/article/view/80.
- ↑ 4.0 4.1 Desy Nurhayati (11 November 2009). "Mt. Batur alert raised to 'caution'". Jakarta Post. http://www.thejakartapost.com/news/2009/11/11/mt-batur-alert-raised-caution039.html.
- ↑ Langston-Able, Nick (2007). Playing with Fire: Adventures in Indonesia. Freakash. pp. 85–98. ISBN 978-0-9553403-4-5.
- ↑ "Kaldera Gunung Batur Sebagai Taman Bumi Global" [Caldera of Mount Batur As Global Earth Park]. Pikiran Rakyat. September 30, 2012. Archived from the original on September 22, 2017. Retrieved January 16, 2016.
the geopark is an award from UNESCO for park managers who are able to implement conservation earth geology and also use it as a tourist attraction.
- ↑ Nyoman Modern (September 30, 2012). "UNESCO Tetapkan Kaldera Gunung Batur sebagai Jaringan Taman Bumi Global" [UNESCO Set Mount Batur Caldera as Global Earth Garden Network]. Voice of America (Bahasa Indonesia). Retrieved January 16, 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Batur". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kintamani