உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தூர் ஏரி

ஆள்கூறுகள்: 08°15′30″S 115°24′30″E / 8.25833°S 115.40833°E / -8.25833; 115.40833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தூர் ஏரி
Lake Batur
Lake Batur & Mount Abang
பத்தூர் ஏரி - அபாங் மலை
பத்தூர் ஏரி is located in இந்தோனேசியா
பத்தூர் ஏரி
      பத்தூர் ஏரி       இந்தோனேசியா
அமைவிடம்கிந்தாமணி, பாங்கிலி பிராந்தியம் பாலி, இந்தோனேசியா
ஆள்கூறுகள்08°15′30″S 115°24′30″E / 8.25833°S 115.40833°E / -8.25833; 115.40833
வகைபல வெப்பஅடுக்கு ஏரி, எரிமலை பள்ளத்தாக்கு ஏரி
அதிகபட்ச நீளம்2.5 km (1.6 mi)
அதிகபட்ச அகலம்7.5 km (4.7 mi)
மேற்பரப்பளவு15.9 km2 (3,900 ஏக்கர்கள்)
அதிகபட்ச ஆழம்88 m (289 அடி)[1]
நீர்க் கனவளவு0.82 km3 (660,000 acre⋅ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,031 m (3,383 அடி)

பத்தூர் ஏரி (இந்தோனேசியம்: Danau Batur; ஆங்கிலம்: Lake Batur) என்பது இந்தோனேசியா, பாலி, பாங்கிலி பிராந்தியம். கிந்தாமணியில் உள்ள ஓர் எரிமலை ஏரி ஆகும். பாலியின் உபுட் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 30 கிமீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ஏரி, எரிமலைச் செயல்பாட்டில் உள்ள எரிமலை வளையத்திற்குள் (Ring of Fire) அமைந்துள்ள பத்தூர் எரிமலையின் பெருவாயின் உள்ளே உள்ளது.

புவியியல்

[தொகு]

பத்தூர் ஏரி என்பது செயல்நிலை எரிமலையான பத்தூர் மலையின் தென்கிழக்குப் பகுதியில், பழைய பத்தூர் எரிமலைப் பெருவாயிற்குள், அமைந்துள்ளது.

அளவியல்

[தொகு]

பத்தூர் ஏரியின் ஆழமான மையம் சுமார் 88 மீட்டர்கள் ஆகும்.[2]

வடிகால் பரப்பு

[தொகு]

பத்தூர் ஏரியின் எரிமலைப் பெருவாய்ப் பகுதி ஒரு முக்கியமான வேளாண்மைப் பகுதியாகும். இங்கு பல்வேறு வகையான விளைபொருட்கள் பயிரிடப்படுகின்றன. பாசன நீர், ஏரியில் இருந்து குழாய்கள் மூலமாக மேலே கொண்டுவரப்பட்ட பிறகு ஏரிக்குள் மீண்டும் பாய்கிறது. பொதுவாக இந்தச் செயல்பாடு, ஏரிக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுவருகிறது.

டோயா பூங்கா கிராமத்தில், பத்தூர் எரிமலையுடன் தொடர்புடைய பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இவை சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[3] இந்த வெப்ப நீரூற்றுகளிலிருந்து வெளிவரும் நீர் மீண்டும் பத்தூர் ஏரியில் பாய்கிறது.

மீன்வளர்ப்பு

[தொகு]

அண்மைய ஆண்டுகளில், பத்தூர் ஏரி மீன் வளர்ப்புக்காகப் பயன்பட்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ​​நைல் நதியைச் சேர்ந்த திலாப்பியா மீன்கள் (Nile tilapia), பத்தூர் ஏரியில் ஆதிக்கம் செலுத்தும் மீன் இனமாக இருந்தது.[4] இந்த மீனின் உள்ளூர்ப் பெயர் ஈக்கான் முஜாயிர் (Ikan Mujair).

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Lakes - Batur Lake". LakeNet. April 30, 2005. Retrieved December 21, 2017.
  2. Whitten, Tony; Soeriaatmadja, Roehayat E.; Afiff, Suraya A. (1996). The ecology of Java and Bali. Vol. II. p. 969.
  3. "Batur Hot Springs". Batur Hot Springs. Retrieved December 21, 2017.
  4. Sentosa, Agus A.; Danu, Wijaya (December 2012). "Community Structure of Introduced Fish in Lake Batur, Bali". Berita Biologi 11. 

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தூர்_ஏரி&oldid=4221072" இலிருந்து மீள்விக்கப்பட்டது