பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம்
KG30 பத்து 11 செராஸ் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பத்து 11 செராஸ் நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Batu 11 Cheras MRT Station Stesen MRT Batu 11 Cheras சீனம்: 蕉赖十一哩 | |||||||||||||||
| அமைவிடம் | பாலக்கோங் சிலாங்கூர் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°12′23″N 101°34′49″E / 3.20639°N 101.58028°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | ||||||||||||||||
| நடைமேடை | 2 பக்க நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 தடங்கள் | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலையம் | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG30 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG30 17 சூலை 2017 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Batu 11 Cheras MRT Station; மலாய்: Stesen MRT Batu 11 Cheras) என்பது மலேசியா, சிலாங்கூர், பத்து 11 செராஸ், பாலக்கோங், பண்டார் சுங்கை லோங் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம்
(Cheras–Kajang Expressway) செராஸ்–காஜாங் விரைவுச்சாலையின் பாலக்கோங் பரிமாற்றச் சாலையில் (Balakong Interchange) அமைந்துள்ளது.
பாலக்கோங்
[தொகு]பாலக்கோங் (Balakong) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு புற நகரப்பகுதி ஆகும். கோலாலம்பூர் பெருநகரத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரமானது; பெரும்பாலும் குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் காடு மேடுகளாக இருந்த இந்தப் பகுதி தற்போது முழுவதுமாக மாற்றப்பட்டு, பல்வேறு வகையான வேலைகள் மற்றும் புதிய தொழில்களை வழங்கி வருகிறது.[1][2]
இங்கு வசிக்கும் உள்ளூர் சீன குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, பாலக்கோங் என்ற பெயர் சீன புதிய கிராமம் (Chinese New Village), அல்லது பாலக்கோங் சீன புதிய கிராமம் (Balakong Chinese New Village) என்பதிலிருந்து வந்தது என அறியப்படுகிறது. பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டமாகும். [3][4]
காஜாங் வழித்தடம்
[தொகு]9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[5]
பொது
[தொகு]9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[6] பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் பாலக்கோங் புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[7]
நிலைய அமைப்பு
[தொகு]இந்த நிலையம், காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை உள்ளது.
இரட்டை வழித்தடங்களிலும் இரண்டு பக்க நடைமேடைகள் உள்ளன; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகளும் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
| L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C |
| G | தரை மட்டம் | நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செராஸ் சாலை |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]இந்த நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இந்த ஊட்டி பேருந்துகள், நிலையத்தின் ஊட்டி பேருந்து (Feeder Bus) மையத்திலிருந்து பாலக்கோங் சாலைக்கு அருகே உள்ள நுழைவாயில் A வழியாக இயக்கப்படுகின்றன.
| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | எஸ்எஸ் 2/2 சாலை | ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் ஊனமுற்றோர் பேருந்து நிலையம் | |
| B | பாலக்கோங் சாலை | வாடகை ஊர்திகள்; தனியார் வாகனங்கள் நிறுத்துமிடம் (→) செராஸ் மாஜு சாலை (→) பார்க்லேண்ட் B11 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான இணைப்புகள் | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி |
|---|---|---|---|
| KG30 பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் | தாமான் செராஸ் ஜெயா | பாலக்கோங் சாலை; | |
| KG30 பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம்; | தாமான் இம்பியான் எசான் ⇌ தாமான் காருன் மாஸ் | பாலக்கோங் சாலை; | |
| PY33 செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A | KG30 பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் | தாமான் தாமிங் ஜெயா ⇌ செரி கெம்பாங்கான் சாலை ⇌ தி மைன்ஸ் ⇌ பாலக்கோங் ⇌ தாமான் புக்கிட் பெலிம்பிங் |
பிற பேருந்து சேவைகள்
[தொகு]பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
| பேருந்து | இயக்குநர் | தொடக்கம் | இலக்கு | பயணவழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| ரேபிட் கேஎல் | காஜாங் நிறுத்தம் | லெபோ புடு முனையம் | ரேக்கோ சென்ட்ரல்; காஜாங் நகரம்
KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் |
கோலாலம்பூருக்கு மட்டும் (→) நிலையத்தை அடைய நடந்து செல்ல வேண்டும். |
காட்சியகம்
[தொகு]பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் (2022)
மேலும் காண்க
[தொகு]- பிரசரானா மலேசியா
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
[தொகு]- எம்ஆர்டி நிறுவனம்
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
- 9 காஜாங் (MRT1)
- 12 புத்ராஜெயா (MRT2)
- 13 சுற்று வழித்தடம் (MRT3)
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The area is almost completely transformed, offering a wide variety of jobs and new industries". Retrieved 19 August 2023.
- ↑ "Balakong or Cheras South is a township in Selangor, Malaysia. Balakong is located precisely at the boundary of Cheras. The township is composed particularly of residential condominiums, workplace complexes and factories". www.hellotravel.com. Retrieved 19 August 2023.
- ↑ Deery, Phillip. "Malaya, 1948: Britain's Asian Cold War?" Journal of Cold War Studies 9, no. 1 (2007): 29–54.
- ↑ Amin, Mohamed (1977). Caldwell, Malcolm (ed.). The Making of a Neo Colony. Spokesman Books, UK. p. 216.
- ↑ Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy.
- ↑ "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html.
- ↑ "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/.
- ↑ "Batu 11 Cheras MRT Feeder Bus T416 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Batu 11 Cheras MRT Feeder Bus T417 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
