உள்ளடக்கத்துக்குச் செல்

பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து ஊபான் (N35)
பினாங்கு மாநில சட்டமன்றத் தொகுதி
Batu Uban (N35)
State Constituency in Penang
பினாங்கு தீவில் மஞ்சள் நிறத்தில் பத்து ஊபான்
வாக்காளர்களின் எண்ணிக்கை43,529 (2023)
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1986
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
சட்டமன்ற
உறுப்பினர்
குமரேசன் ஆறுமுகம்
முதல் தேர்தல்1986
இறுதித் தேர்தல்2023
பரப்பளவு9 சதுர கி.மீ

பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதி (N35) (மலாய்: Bahagian Pilihan Raya Batu Uban; ஆங்கிலம்: Batu Uban State Constituency) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி ஆகும். 1986 முதல் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது. இந்தத் தொகுதி பினாங்கு தீவின் கிழக்கு கடற்கரையின் ஒரு பகுதியை உள்ளடக்கியது; மற்றும் ஜார்ஜ் டவுன் மாநகருக்கு தெற்கே உள்ள புறநகர்ப் பகுதிகளும் அதில் அடங்கும்.

பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதி 1986-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதி, பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது குமரேசன் ஆறுமுகம் என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.




2023-ஆம் ஆண்டில் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்[1]

  சீனர் (58.70%)
  மலாயர் (25.44%)
  பிற இனத்தவர் (1.17%)


பத்து ஊபான்

[தொகு]

பத்து ஊபான் (Batu Uban) என்பது மலேசியா, பினாங்கு, பட்டர்வொர்த் நகரின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும். பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகர் மையத்தில் இருந்து தெற்கே சுமார் 6.7 கி.மீ. (4.2 மைல்) தொலைவில், குளுகோர் புறநகர்ப் பகுதிக்கு அருகில் உள்ளது.

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தோனேசியா. சுமத்திரா தீவ்ல் இருந்து வந்த மினாங்கபாவு (Minangkabau) இன மக்களால் நிறுவப்பட்ட இந்தப் பத்து ஊபான் குடியேற்றப் பகுதி, பினாங்கு தீவில் மிகப் பழமையான மலாய் குடியேற்றமாகக் கருதப்படுகிறது.[2][3]

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, பத்து ஊபான் குறிப்பிடத்தக்க வகையில் நகரமயமானது. தற்போது இந்தக் குடியிருப்புப் பகுதியின் சுற்றுப் புறங்களில், மிக உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.[2][4][5][6]

வரலாறு.

[தொகு]
பினாங்கு மாநில சட்டமன்றத்தின் பத்து ஊபான் உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள். உறுப்பினர் கட்சி
சுங்கை நிபோங்; புக்கிட் குளுகோரில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி
7-ஆவது 1986 – 1990 கி பாய்க் சின் பாரிசான்
(கெராக்கான்)
8-ஆவது 1990 – 1995
9-ஆவது 1995 – 1999
10-ஆவது 1999 – 2004
11-ஆவது 2004 – 2008 கோ கெங் சினியா
12-ஆவது 2008 – 2013 ரவீந்திரன் சுப்பிரமணியம் பாக்காத்தான் ராக்யாட்
(பிகேஆர்)
13-ஆவது 2013 – 2015 ஜெயபாலன் தம்பியப்பா
2015 – 2018 பாக்காத்தான் அரப்பான்
(பிகேஆர்)
14-ஆவது 2018 – 2023 குமரேசன் ஆறுமுகம்
15-ஆவது 2023–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பினாங்கு மாநிலத் தேர்தல் 2023
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
குமரேசன் ஆறுமுகம்பாக்காத்தான்22,77376.833.60
மோக் கோக் ஆன்பெரிக்காத்தான்6,06520.4620.50 Increase
லீ கிம் நூர்மூடா8032.712.70 Increase
மொத்தம்29,641100.00
செல்லுபடியான வாக்குகள்29,64199.27
செல்லாத/வெற்று வாக்குகள்2180.73
மொத்த வாக்குகள்29,859100.00
பதிவான வாக்குகள்43,5292985914.50
Majority16,70856.39.60
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "15th Penang State Election - Results Overview". live.chinapress.com. Retrieved 2023-08-13.
  2. 1 2 "Earliest Malay settlement in Penang – Community | The Star Online". www.thestar.com.my. Retrieved 2017-05-23.
  3. "USM News Portal – BATU UBAN PETEMPATAN AWAL ORANG PULAU PINANG". news.usm.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2017-05-23.
  4. "www.propertyguru.com.my/condo/condo-718". www.propertyguru.com.my. Retrieved 2017-05-23.
  5. "www.propertyguru.com.my/condo/e-park-condominium-717". www.propertyguru.com.my. Retrieved 2017-05-23.
  6. "Specially crafted for serene living – Community | The Star Online". www.thestar.com.my. Retrieved 2017-05-23.

வெளி இணைப்புகள்

[தொகு]