உள்ளடக்கத்துக்குச் செல்

பத்திரிசு லுமும்பா உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்திரிசு லுமும்பா உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்
Patrice Lumumba Peoples' Friendship University of Russia
Российский университет дружбы народов имени Патриса Лумумбы
உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம், மிக்லுகோ-மக்லாயா சாலை, மாசுக்கோ
குறிக்கோளுரைஒரே பல்கலைக்கழகத்தில் உலகைக் கண்டறியுங்கள்!
Открой Мир в одном Университете!
வகைபொது
உருவாக்கம்5 பெப்ரவரி 1960
தலைவர்விளாதிமிர் பிலிப்போவ்
தலைமை ஆசிரியர்அலெக் யாசுத்ரிபோவ்
நிருவாகப் பணியாளர்
8,586
மாணவர்கள்38,484
பட்ட மாணவர்கள்25,650
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்11,450
1,384
அமைவிடம்
117198, மாஸ்கோ, மிக்லுகோ மக்லாயா சாலை. 6
, ,
வளாகம்நகர்ப்புறம்
நிறங்கள்            
சேர்ப்புபொதுப் பல்கலைக்கழகங்களின் பன்னாட்டு மன்றம்
இணையதளம்https://eng.rudn.ru/

பத்திரிசு லுமும்பா உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் (Patrice Lumumba Peoples' Friendship University of Russia, உருசியம்: Российский университет дружбы народов имени Патриса Лумумбы), அல்லது RUDN University) என்பது உருசியத் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ஒரு பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். காங்கோ அரசியல்வாதியான பத்திரிசு லுமும்பாவின் நினைவாக இது பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் 1960 பெப்ரவரி 5 ஆம் நாள் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தின்படி நிறுவப்பட்டது. குடியேற்ற நாடுகளிடம் இருந்து விடுதலை அடைந்த நாடுகளுக்கு உதவுவதற்காக இது நிறுவப்பட்டது.[1] அணிசேரா நாடுகளில் சோவியத் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை மேலும் மேம்படுத்தவும் இந்தப் பல்கலைக்கழகம் செயல்பட்டது.

வரலாறு

[தொகு]

மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் சோவியத் அரசாங்கத்தால் 1960, பெப்ரவரி 5 இல் ஆரம்பிக்கப்பட்டது. கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக பெப்ரவரி 22, 1961 இல் இப்பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. முதலாம் ஆண்டில் 59 நாடுகளில் இருந்து மொத்தம் 539 வெளிநாட்டு மாணவர்களும், 57 சோவியத் மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.

1990களில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பின்னர் பெப்ரவரி 5, 1992 இப்பல்கலைக்கழகத்தின் பெயர் "ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்" என மாற்றப்பட்டது.

இன்று

[தொகு]

இன்று, இப்பல்கலைக்கழகத்தின் 47,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் உலகின் 165 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். தற்போது இங்கு பட்டப்பின்படிப்பு, மற்றும் தொழிற்பயிற்சி உட்பட 57 கல்வித்திட்டங்களில் 131 நாடுகளின் 450 இனங்களில் இருந்து கிட்டத்தட்ட 23,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 3,500 வெளிநாட்டினர் அடங்குவர்.

பழைய மாணவர்கள் சிலர்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Decree of the Central Committee of the CPSU, Council of Ministers of the USSR of 05.02.1960 N 130 "On the organization of the Peoples' Friendship University"". consultant.ru. 2022-10-11. Archived from the original on 2022-07-06. Retrieved 2022-10-11.

வெளி இணைப்புகள்

[தொகு]