பத்திரக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்திரக் மாவட்டம் (ப⁴த்³ரக), ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பத்ரக் நகரத்தில் அமைந்துள்ளது.[1]

மாவட்ட விவரம்[தொகு]

பத்திரக மாவட்டம் கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் நிருவாக மாவட்டமாகும். மாவட்ட தலைமையகமாக விளங்கும், பத்திரக நகரத்தின் பெயரால் இந்த மாவட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2] இது ஏப்ரல் 1, 1993 இல் இருந்து நிருவாக அமைப்பால் மாவட்டமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு வளமான பாரம்பரியமும் வரலாறும் உள்ளன. இந்திய புராணங்களின் படி, இது அதன் பெயரை பத்ரகளி தேவியிடமிருந்தும் பெற்றது. அதன் கோயில் சலந்தி ஆற்றின் கரையில் உள்ளது. இந்த மாவட்டம் வடக்கே பாலசோர் மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது. தெற்கே, ஜஜ்பூர் மாவட்டமும்,பைதரணி நதியும், மேற்கில் ,கியோஞ்சர் மாவட்டமும், வங்காள விரிகுடாவும், கிழக்கில் கேந்திரபாதா மாவட்டமும் உள்ளன. இதன் அமைவிடம் நில வரைப்படத்தில் 21.0667 அட்சரேகை மற்றும் 86.5000 தீர்க்கரேகைகளில் அமைந்து உள்ளது. பத்திரக மாவட்டம் 2505 சதுர பரப்பளவினைக் கொண்டுள்ளது. 2,46,529 எக்டேர் ஆகும்். புவியியல் பரப்பளவில் கிலோ மீட்டருக்கு, மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,506,337 ஆக உள்ளது. மொத்த ஆண் மக்கள் தொகை 760260 ஆகவும், பெண் மக்கள் தொகை 746077 ஆகவும் இருக்கின்றனர். இத்மாவட்டத்தின் மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை 286723 ஆகவும், மொத்த தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மக்கள் தொகை 25141 ஆகவும் உள்ளனர். மொத்த மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள் தொகை, 15142 எனவும் இருக்கிறார்களென, அரசுப் புள்ளியியல் கணக்குக் கூறுகிறது. பத்ராக் மாவட்டத்திற்கு ஒரே ஒரு துணைப் பிரிவு மட்டுமே உள்ளது. அதாவது பத்திரக. மாவட்டத்தில் 07 தாசில்கள் மற்றும் 07 தொகுதிகளும் செயல்பட்டு வருகின்றன. பத்திரக மாவட்டத்தில் இரண்டு நகராட்சி, இரண்டு என்ஏசி, 17 காவல் நிலையங்கள், 218 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த மாவட்டத்தின் காலநிலை பொதுவாக வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் எப்பொழுதும் நிலவுகிறது. மே மாதமானது, மிகவும் வெப்பமான மாதமாகும். பொதுவாக சூன் மாதத்தில் பருவமழை பொழிகிறது. டிசம்பர் மிகவும் குளிரான மாதமாகும். ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மழைப்பொழிவு காணப் படுகிறது. இந்த மாவட்டத்தின் உண்மையான மழை அளவு, குறைந்தது 75 சதவீதமாகும். மாவட்டத்தின் முக்கிய வருமான ஆதாரமாக விவசாயம் உள்ளது. கரிஃப்பில் நெல் முக்கிய பயிராக வளர்க்கப்படுகிறது, இது மொத்த சாகுபடி பரப்பளவில் சுமார் 94 சதவீதத்தை உள்ளடக்கியது. ஆனால் கடற்கரைப் பகுதியில் உள்ளவர்களும், தமாரா, பசுதேவ்பூரின் சூடமணி மற்றும் சந்தபாலி தொகுதியின் சந்தபாலி பகுதி மக்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித்தலை நம்பி இருக்கிறார்கள்.

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: போந்து, பண்டாரிபோகரி, பத்திரகம், பாசுதேவ்பூர், திகிடி, தாம்நகர், சாந்தபாலி ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பண்டாரிபோகரி, பத்திரகம், பாசுதேவ்பூர், தாம்நகர், சாந்தபாலி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1] இந்த மாவட்டம் பத்திரக மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

சுற்றுலா[தொகு]

இம்மாவட்டத்தில் பல கோவில்கள் உள்ளன. மேலும், வரலாற்று சிறப்புமிக்க ஏராம்(Raktatirtha) இடம் உள்ளது.[3] பத்ரக் மாவட்டத்தின் பசுதேபூரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற தியாக இடம் ஆகும். இந்த நிலத்தின், ஒரு பக்கம் வங்காள விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது, மற்ற மூன்று பக்கங்களும் கேமியே மற்றும் கன்சபன்சா ஆகிய இரண்டு ஆறுகளால் சூழப்பட்டுள்ளன. இந்த இயற்கை எல்லைகளால் பாதுகாக்கப்பட்ட இந்த இடம், சுதந்திர போராட்ட வீரர்களால் ஒரு கோட்டையாக பயன்படுத்தப் பட்டது. இந்த இயற்கை எல்லைகள் காரணமாக, காவல்துறை மற்றும் நிர்வாக நபர்கள் இந்த இடத்திற்கு நுழைவது, சுதந்திர போராட்டக் காலத்தில் கடினமாக அமைந்து இருந்ந்து.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. https://bhadrak.nic.in/about-district/
  3. https://bhadrak.nic.in/tourist-place/eram-raktatirtha/

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரக்_மாவட்டம்&oldid=3561743" இலிருந்து மீள்விக்கப்பட்டது