பத்தினிப் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்தினிப் பெண்
இயக்கம்ஆர். சி. சக்தி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரூபினி
லிவிங்ஸ்டன்
நிழல்கள் ரவி
வி. கோபாலகிருஷ்ணன்
ஜனகராஜ்
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜ்
கலையகம்பெஸ்ட் பிரண்ட்ஸ் கிரியேசன்ஸ்
வெளியீடுசூன் 25, 1993 (1993-06-25)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பத்தினிப்பெண் (Pathini Penn) 1993 ஆம் ஆண்டு ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரூபினி, லிவிங்ஸ்டன் முக்கிய வேடங்களிலும் நிழல்கள் ரவி, வி. கோபாலகிருஷ்ணன் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்தியக் காவல் பணி அதிகாரி ஜி. திலகவதி எழுதிய இதே பெயரிலுள்ள புதினத்தின் தழுவலான இப்படம் 1993 சூன் மாதம் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

கவிஞர் புலமைப்பித்தன் வரிகளுக்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3]

விருதுகள்[தொகு]

இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றது. ஆர். சி. சக்தி சிறந்த வசன எழுத்தாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார்.[4] ரூபினி சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு திரைப்பட விருதை வென்றார். புலமைப்பித்தன் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார்.

வரவேற்பு[தொகு]

பத்தினி பென் 1993 சூன் 25 அன்று வெளியிடப்பட்டது. தி இந்தியன் எக்சுபிரசின் மாலினி மன்னத், "சக்தி உணர்ச்சிகரமான விடயத்தைக் கையாண்டது, கவனமாக பதிவுசெய்யப்பட்ட காட்சிகள், அவரது கடினமான உரையாடல்கள், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை பெற்றது ஆகியவற்றை மேற்கோள் காட்டி திரைப்படத்தைப் பாராட்டினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pathini Penn – Tamil Movies Database". Tamil Movies Database. 24 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Pathini Penn". Valai Tamil. 24 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Amaithi Padai / Pathini Penn / Kathal Viduthalai – Pyramid". Greenhives Audio. 24 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. James, Anu (2015-02-23). "Kamal Haasan's Mentor Director RC Sakthi Dies at 76 [PHOTOS]". International Business Times. 2019-12-24 அன்று பார்க்கப்பட்டது.
  5. Mannath, Malini (18 June 1993). "Though-provoking". The Indian Express: p. 6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930618&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தினிப்_பெண்&oldid=3436267" இருந்து மீள்விக்கப்பட்டது