பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (10th International Conference – Seminar on Tamil Studies) 2019 ஆம் ஆண்டு சூலை 4 முதல் சூலை 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் இலினொய் மாநிலத்தில், சிகாகோ நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (பெட்னா), சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்" என்பதாகும்.[1]

இம்மாநாட்டிற்கு உலகெங்கணும் இருந்து 6,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொரிசியசு செயல் குடியரசுத்தலைவர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]