பத்தலுங் மாகாணம்
பத்தலுங் மாகாணம்
Phatthalung Province พัทลุง | |
|---|---|
பத்தலுங் மாகாணத்தின் காட்சிப் படங்கள் | |
| அடைபெயர்(கள்): Mueang Lung | |
| குறிக்கோளுரை: நெல் வயல்கள் நிறைந்த நோரா நகரம். கண்கவர் நீர்வீழ்ச்சிகள்; நீர்ப்பறவைகளின் உறைவிடம்; அழகான ஏரிகள்; ஓக் தாலு மலை; வெந்நீர் ஊற்றுகள். เมืองหนังโนราห์ อู่นาข้าว พราวน้ำตก แหล่งนกน้ำ ทะเลสาบงาม เขาอกทะลุ น้ำพุร้อน | |
தாய்லாந்தில் பத்தலுங் மாகாணம் | |
| ஆள்கூறுகள்: 7°36′56″N 100°04′22″E / 7.61556°N 100.07278°E | |
| நாடு | |
| மாகாணம் | பத்தலுங் மாகாணம் |
| தலைநகரம் | பத்தலுங் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 3,861 km2 (1,491 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 56-ஆவது[1] |
| மக்கள்தொகை (2024)[2] | |
| • மொத்தம் | ▼5,19,440 |
| • தரவரிசை | 50-ஆவது |
| • அடர்த்தி | 135/km2 (350/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 31-ஆவது |
| மனிதச் சாதனை குறியீடு[3] | |
| • HAI (2022) | 0.6242 |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி [4] | |
| • மொத்தம் | பாட் 36 பில்லியன் (US$ 1.2 பில்லியன்) (2019) |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
| அஞ்சல் குறியீடு | 93xxx |
| தொலைபேசி | 074 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | TH-93 |
| இணையதளம் | phatthalung |
பத்தலுங் மாகாணம் (ஆங்கிலம்: Phatthalung Province; தாய்: พัทลุง) என்பது தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களில் ஒன்றாகும். இதன் அண்டை மாகாணங்களாக நக்கோன் சி தாமரத் மாகாணம் சொங்கலா மாகாணம், சத்துன் மாகாணம் மற்றும் திராங் மாகாணம் ஆகியவை உள்ளன. நிலப்பகுதியால் சூழப்பட்டு கடற்கரை இல்லாத மாகாணங்களில் பத்தலுங் மாகாணமும்[5] ஒன்றாகும்.
பன்தாத் மலைகளுக்கும் (Banthat Mountains) சொங்கலா ஏரிக்கும் (Songkhla Lake) இடையில் பத்தலுங் மாகாணம் அமைந்துள்ளது. மேலும் இதன் பழைய மலாய்ப் பெயர் மார்டெலோங் ஆகும். இரண்டு மலைக் கோயில்களும்; காவ் ஒக் தாலு குகை; மற்றும் காவ் குகா சவான் குகை ஆகிய புனிதக் குகைகளும் இந்த மாகாணத்தில் உள்ளன. பத்தலுங் நகரம் அயூத்தியாவின் பன்னிரண்டு அரச நகரங்களில் ஒன்றாக இருந்தது. மேலும் தற்போதுள்ள இடத்திற்கு 1924-இல் மாற்றப்பட்டது
வரலாறு
[தொகு]தென் தாய்லாந்தின் 26 மலைக் கோயில்கள் மற்றும் இரண்டு புனித பௌத்தக் குகைகள் பத்தலுங்கில் அமைந்துள்ளன. இந்து சமூகத்தினர் நீண்ட காலத்திற்கு மலை உச்சி கோயில்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர். அதே நேரத்தில் பௌத்தர்கள் பெரும்பாலும் ஒரு பௌத்த குகையைப் பயன்படுத்தினர்.[6]:39, 45 பத்தலுங் பிராந்தியம் மலாய்-முசுலிம் செல்வாக்கின் கீழ் இருந்த காலத்தில், அந்தப் பிராந்தியம் மார்டெலோங் (Mardelong) சாவி எழுத்துமுறையில்: مردلوڠ)[7] என்று அழைக்கப்பட்டது.
14-ஆம் நூற்றாண்டில் அயூத்தியா இராச்சியத்தின் முதலாம் இராமாதிபோதி I மன்னரின் ஆட்சியின் போது, பத்தலுங் நகரம் பன்னிரண்டு அரச நகரங்களில் ஒன்றாக மாறியது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், முதலாம் இராமா மன்னர் இந்த நகரத்தை அனைத்து தெற்கு மாகாணங்களுக்கும் பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒப்படைத்தார்.
1896-இல், சுலலாங்கொர்ன் மன்னரின் நிர்வாக சீர்திருத்தங்களின் போது, பத்தலுங் பிராந்தியம்; நக்கோன் சி தாமரத் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1924-இல், ஆறாம் இராமா மன்னர் (Vajiravudh) பத்தாலுங் நகரத்தை தற்போதுள்ள பேங்காக் குகா சவான் துணை மாவட்டத்திற்கு மாற்ற கட்டளை பிறப்பித்தார்.
புவியியல்
[தொகு]பத்தலுங் மாகாணம் அந்தமான் கடலின் கரையில், மலாய் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த மாகாணம் நக்கோன் சி தாமரத் மலைத்தொடரால், சொங்கலா மாகாணத்தில் இருந்தும்; நக்கவான் மலைத்தொடரால் மலேசியாவில் இருந்தும் பிரிக்கப்பட்டுள்ளது.
பத்தலுங் மாகாணம் மலாய் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கே பெரிய மற்றும் ஆழமற்ற சொங்கலா ஏரியையும், மேற்கே நக்கோன் சி தாமரத் மலைத்தொடரையும் எல்லையாகக் கொண்டுள்ளது. காவ் பு–காவ் யா தேசியப் பூங்கா (Khao Pu–Khao Ya National Park) திராங் மாகாணத்தின் எல்லையில்[8] அமைந்துள்ளது. பத்தலுங் மாகாண வனப்பகுதி 628 சதுர கிமீ (242 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மாகாணத்தின் மொத்தப் பரப்பளவில் 40.1 விழுக்காடு ஆகும்.[1]
தேசிய பூங்காக்கள்
[தொகு]பத்தலுங் மாகாணத்தில் ஒரு தேசியப் பூங்கா உள்ளது.[9] (2024 ஆண்டில் வருகையாளர்கள்)
| காவ் பு–காவ் யா தேசியப் பூங்கா | 694 சதுர கிமீ | (87,155) |
மக்கள்தொகை
[தொகு]இந்த மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் தாய்லாந்து பௌத்தர்கள் ஆவர். முசுலிம் மக்கள் தொகையில் 11.1 விழுக்காடாக உள்ளனர். பத்தலுங்கில் உள்ள முசுலிம்கள் பலர் மலாய் இன மரபுவழியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய்லாந்து மக்களுடன் திருமண உறவு கொண்டு, தாய்லாந்தின் பண்பாட்டு நெறிமுறைகளை[10] ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எஞ்சியுள்ள 0.3 விழுக்காட்டில் பிற சமயங்களின் விவரம் பின்வருமாறு:
- கிறித்தவம் 0.2%,
- சீக்கியம் 0.1%,
- கன்பூசியம் 0.02%
- மற்றும் இந்து சமயம் 0.2%
மாகாண நிருவாகம்
[தொகு]மாகாண அரசு
[தொகு]பத்தலுங் மாகாணம் 11 மாவட்டங்களாகப் (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் மேலும் 65 துணை மாவட்டங்களாகவும் 626 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

| # | ஆங்கிலம் | தாய் | தமிழ் | மலாய் |
|---|---|---|---|---|
| 1 | Mueang Phatthalung | เมืองพัทลุง | முயேங் பத்தலுங் | Bandaraya Mardelong |
| 2 | Kong Ra | กงหรา | கோங்ரா | Tiang Katung Ria |
| 3 | Khao Chaison | เขาชัยสน | காவ் சைசோன் | Gunung Sanubar Jaya |
| 4 | Tamot | ตะโหมด | தமோத் | Toh Mod |
| 5 | Khuan Khanun | ควนขนุน | குவான் கனூன் | Bukit Nangka |
| 6 | Pak Phayun | ปากพะยูน | பாக் பயூன் | Daksina |
| 7 | Si Banphot | ศรีบรรพต | சி பான்போத் | Seri Ancala |
| 8 | Pa Bon | ป่าบอน | பா போன் | Hutan Keladi |
| 9 | Bang Kaeo | บางแก้ว | பங் காவ் | Kampung Permata |
| 10 | Pa Phayom | ป่าพะยอม | பா பயோம் | Hutan Meranti Nipis |
| 11 | Srinagarindra | ศรีนครินทร์ | செரி நாகரிந்திரா | Seri Inderapura |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022
[தொகு]2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]
| நிலை | வகைப்பாடு |
| 1 - 13 | உயர்வு |
| 14 - 29 | சற்று உயர்வு |
| 30 - 45 | சராசரி |
| 46 - 61 | சற்று குறைவு |
| 62 - 77 | குறைவு |
| தாய்லாந்து மாகாணங்களின் மனிதச் சாதனை குறியீடு 2022 |
காட்சியகம்
[தொகு]- பத்தலுங் மாகாணத்தின் காட்சிப் படங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
- ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025.
, year 2024, provincial level, Excel File, no.93
- 1 2 "Human Achievement Index Statistics, Year 2025 (PDF)". Office of the National Economic and Social Development Council (NESDC). Retrieved 12 March 2024.
- ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
- ↑ "The Role of Shadow Puppetry in the Development of Phatthalung Province, Thailand" (PDF). Archived from the original (PDF) on 2016-04-10.
- ↑ Ueasaman, Phanuwat (2019). "Ancient Hill Temples and Holy Caves in Upper Southern Thailand and the Trans-peninsular Route Connection". In Amara Srisuchat; Wilfried Giessler (eds.). Ancient Maritime Cross-cultural Exchanges: Archaeological Research in Thailand (PDF) (in ஆங்கிலம்). Bangkok: Fine Arts Department, Ministry of Culture. pp. 34–53. ISBN 978-616-283-434-9. Archived (PDF) from the original on 2 September 2026. Retrieved 3 September 2026.
- ↑ C. Skinner (1985). The Battle for Junk Ceylon: The Syair Sultan Maulana. Foris Publications. p. 272. ISBN 90-6765-066-8.
- ↑ "Khao Pu-Khao Ya National Park". Department of National Parks (DNP) Thailand. Archived from the original on 17 November 2015. Retrieved 23 May 2015.
- ↑ "Statistics on tourist visits to national parks, Fiscal Year 2024" [Statistics of tourists visiting national parks in fiscal year 2024]. Department National Parks, Wildlife and Plant Conservation. Retrieved 6 September 2025.
- ↑ William Chambers (publisher), Robert Chambers (journalist) (1898). Chambers's Journal. W. & R. Chambers. p. 539.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Phatthalung Province பத்தலுங் மாகாணம் பற்றிய ஊடகங்கள்
விக்கிமூலத்தில் Phatthalung பற்றிய ஆக்கங்கள்- Website of the province (Thai only)
- Phattalung provincial map, coat of arms and postal stamp பரணிடப்பட்டது அக்டோபர் 6, 2010 at the வந்தவழி இயந்திரம்
