பத்தமடை பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்தமடை பாய்

பத்தமடைப் பாய், (Pathamadai Grass mat) இந்தியாவின், தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தின், பத்தமடை எனும் ஊரில் ஓடும் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் கோரைப்புற்களால் நெய்யப்படும் பாய்கள். இப்பாய்கள், 100 முதல் 140 பாவுப் பருத்தியாலோ பட்டு இழைகளாலோ நெய்யப்படுகின்றன.[1]

பிற பாய்களை விட இவை மெல்லியதாகவும், மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் உடலுக்கு ஏற்றதாகவும் உள்ளன.பத்தமடைப் பாய் புவிசார் தகுதி பெற்று, புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் இடம் பிடித்துள்ளது. [2] [3]


பொது[தொகு]

பெரும்பாலான பாய்கள் பருத்திப் பாவாலும் கோரை ஊடையாலும் நெய்யப்படுகிறது. கோரை சைபெராசியே புல்லினத்தைச் சேர்ந்த தாவரமாகும். கோரைப் பாய்கள் மூவகைப்படும். கரட்டுப் பாய்கள் யாப்பில் முருடானவை. இவற்றைக் கைத்தறியிலோ விசைத்தறியிலோ கூட நெய்ய முடியும்.உயர்தர கைத்தறிப் பாய்கள் யாப்பில் நயமானவை. இவற்றில் மிக உயர்ந்த வகை பட்டு போல மிளிரும். இவ்வகை பாயை நெய்ய, ஒருவாரத்துக்கு கோரை தண்ணீரில் அமிழ்த்தி அழுகும் பதம் வரை ஊறவைக்கப்படும். பிறகு நடுச் சேவு பிரித்தெடுக்கப்படும். இந்த நடுத்தண்டு பின்னர் நுன்புரிகளாகப் பிரித்து உலர்த்தி வண்னமூட்டப்படும். நுண்பாய்வகைக்கு ஊடைக்கோரைப் புரிகள் மெல்லிதாக அமையும். ஊடைப்புரி எண்ணிக்கையும் மிகும்.

பொதுவான பாயகள் மட்டுமல்லாமல் திருமணத்துக்கு என்றே மணமக்கள் பெயரமையும்படியும் திருமணத் திகதியுடனும் தனிப்பட்டமுறையில் இவை நெய்யப்படுவதுண்டு.

நெசவுமுறை[தொகு]

பத்தமடைப் பாயின் நெசவுமுறை அரியது மட்டுமல்ல, மிகுந்த நேரத்தைஎடுத்துக் கொள்ளும். இதை நெய்யும் கைத்தொழிலும் கலையும்மிக நுட்பமான வடிவமைப்புகளைப் பிணைமுறையும் இந்த வட்டாரத்துக்கே உரிய தனிதன்மை உடையதாகும்.இந்த பாய் நெய்வதற்கான கோரைப்புல் சதுப்பு நிலங்களில் ஆற்றுப் படுகைகளிலும் வளர்கிறது.

கோரைப்புல்லைப் பதப்படுத்தல்[தொகு]

பச்சையாக அறுத்த கோரைப்புல்லை உலர்த்தி, பிறகு நனையவைத்துப் பின் வேண்டிய வண்ணமூட்டப்படுகிறது. புல் அறுவடைப் பருவம் செப்தம்பர்/அக்தோபரில் அல்லது பிப்ரவரி/மார்ச்சில் அமையும். பச்சையாக அறுத்த புல்லை எப்போதும் ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்தல் வேண்டும்; இல்லாவிடில் கருத்துவிடும். உலர்ந்த புல் மஞ்சள்பசுமை நிறமடைந்ததும் பனை நீரில் கொத்திக்க வைத்துப் பின் மறுபடியும் உலர்த்த வேண்டும்.இப்ப்டி உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீரில்அமிழச் செய்து மூன்று முதல் ஏழு நாட்கள் வரை வைக்கப்படும். அப்போது அது மும்மடங்கு பருத்திடும்.இது மீண்டும் உலர்த்தப்பட்டு நெசவறைக்குக் கொண்டுசெல்லைப்படுகிறது. நெய்த பாயை மறுபடியும் உலர்த்தி, பின்னர் மெருகூட்டப்படும்..

பாய் வகைகள்[தொகு]

சந்தையில் கிடைக்கும் பத்தமடைப் பாய்களில் மூவகையுண்டு. இந்த வகைபாடு நெசவுமுறை சார்ந்தமைகிறது.இவை, முரட்டு நெசவு வகை. நடுத்தர நெசவு வகை, நுண் நெசவு வகை என்பனவாகும். நுண்வகைப் பத்தமடைப் பாயை நெய்ய பயன்படும் கோரையின் புறவுறை உரித்து கிடைக்கும் நுண்புரி பயன்படுகிறது.

பாய் நெய்யும் தறி[தொகு]

பாய் நெய்யும் தறியின் பாவு ஒரு மூங்கில் முக்காலி மீது வைக்கப்பட்டிருக்கும். கோரைப்புரி ஊடை ஊசியில் கோர்த்து கஞ்சி பூசிய பாவிடையில்வடிவமைப்பிற்கேற்ப மேலும் கீழும் செலுத்தப்படும். இச்செயல்முறை துணி நெய்வதைப் போன்றதே. கோரைப்புல்லை மென்மையாக்க தொடர்ந்துதண்ணீர் பயன்படுகிறது. கீழுள்ள படம் பாய் நெய்யும் தறியைக் காட்டுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பத்தமடைப் பாய்
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=580268
  3. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/article2194340.ece Grass mats still hold their own here

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தமடை_பாய்&oldid=2469101" இருந்து மீள்விக்கப்பட்டது