பத்ததி வழிபாட்டு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்ததி வழிபாட்டு முறை என்பது ஆரம்பகால மக்களது வழிபாட்டு முறையாகும். இதனை பத்தாசி எனவும் அழைப்பர். இப்பத்ததிகள் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளில் காணப்படுகின்றன. இவை பூசை விதிமுறைகளையும் அதற்கான மந்திர யந்திரங்களையும் கூறுகின்றன.

இப்பத்ததிகள் குரு சீட முறையில் பாதுகாக்கப்பட்டு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றன. பத்ததி வழிபாட்டு முறையில் விக்கிரகங்களை விட கும்பங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆகமம் சாராத பத்ததிகள், ஆகமம் சார் பத்ததிகள் என இரு வகைப்படும். [1] பத்ததி நூல் செய்தவர் அந்தணர் ஆயின் 'சிவம்' என்றும், அரச மரபினர் ஆயின் 'தேவர்' என்றும் குறிப்பிடுவது வழக்கம். [2]

பத்ததி என்பது பத்தியின் அதிகரிப்பு. பத்தி [3] வழிபடுவோர் மாட்டு நிகழ்வது உண்டு. இப்படி நிகழ்ந்து பாடப்பட்ட வடமொழி நூல் குகபத்ததி. [4]

மட்டக்களப்பில் வழங்கப்படும் சில ஆகமம் சாராத பத்ததிகள்[தொகு]

 • காளியம்மன் பத்ததி,
 • மாரியம்மன் பத்ததி,
 • பேச்சியம்மன் பத்ததி,
 • கண்ணகியம்மன் பத்ததி,
 • வதனமா பத்ததி,
 • வயிரவர் பத்ததி,
 • திரௌபதி அம்மன் விதிமுறை,
 • விஷ்ணு பத்ததி,
 • பெரிய தம்பிரான் பத்ததி

அடிக்குறிப்பு[தொகு]

 1. கும்பம்
 2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 204. 
 3. பக்தி
 4. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 165.