உள்ளடக்கத்துக்குச் செல்

பதோகி

ஆள்கூறுகள்: 25°25′N 82°34′E / 25.42°N 82.57°E / 25.42; 82.57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதோகி
நகரம்
பதோகி is located in உத்தரப் பிரதேசம்
பதோகி
பதோகி
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதோகி நகரத்தின் அமைவிடம்
பதோகி is located in இந்தியா
பதோகி
பதோகி
பதோகி (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°25′N 82°34′E / 25.42°N 82.57°E / 25.42; 82.57
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்
நிறுவிய ஆண்டு30 சூன் 1994
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பதோகி நகராட்சி மன்றம்
ஏற்றம்
85 m (279 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்94,620
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
 • வட்டார மொழிகள்அவதி மொழி, போச்புரி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
221401
வாகனப் பதிவுUP-66
இணையதளம்https://bhadohi.nic.in/

பதோகி (Bhadohi), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த சந்து ரவிதாஸ் நகர் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பிரயாக்ராஜ்-வாரணாசி இடையே அமைந்த பதோகி நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 291 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வாரணாசிக்கு வடமேற்கே 57.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்நகரம் தரை விரிப்பு நெசவுக்கு பெயர் பெற்றது. இந்நகரம் பதோகி மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 13,274 குடியிருப்புகளும் கொண்ட பதோகி நகரத்தின் மக்கள் தொகை 94,620 ஆகும். அதில் 49,639 ஆண்கள் மற்றும் 44,981 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 72.6% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,597 மற்றும் 15 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 41.84%, இசுலாமியர் 57.02%, கிறித்தவர்கள் 0.28% மற்றும் பிற சமயத்தினர் 0.86% வீதம் உள்ளனர்.[1]

தொடருந்து நிலையம்

[தொகு]

பதோகி தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரஙகளுக்கு தொடருந்துகள் செல்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதோகி&oldid=4288704" இலிருந்து மீள்விக்கப்பட்டது