பதுகேஷ்வர் தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதுகேஷ்வர் தத்
பிறப்பு(1910-11-18)18 நவம்பர் 1910
கான்பூர், பிரித்தானிய இந்தியா[1]
இறப்புசூலை 20, 1965(1965-07-20) (அகவை 54)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அமைப்பு(கள்)நாவுஜவான் பாரத் சபா, இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பு
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்

பதுகேஷ்வர் தத் About this soundஒலிக்க  (Batukeshwar Dutt, நவம்பர் 18,1910 - ஜூலை 20,1965) 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்[2]. இவர் ஏப்ரல் 8, 1929 இல் பகத் சிங்குடன் இணைந்து தில்லியில் வெடிகுண்டு வீசிய நிகழ்வின் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்னர் அச்செயலுக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்துஸ்த்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் உறுப்பினராக இருந்தார். சிறையிலிருந்து விடுதலையான பின்னர் இவர் காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்குகொண்டு சிறைக்குச் சென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுகேஷ்வர்_தத்&oldid=3406371" இருந்து மீள்விக்கப்பட்டது