பதிலா முகமது ரபி
பதிலா முகமது ரபி Fadilah Mohamed Rafi | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() 2019 இல் பதிலா முகமது ரபி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நேர்முக விவரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு பெயர் | பதிலாசமிகா முகமது ரபி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | உகாண்டா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 ஏப்ரல் 2005 தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கரம் | வலது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மகளிர் ஒற்றையர் & இரட்டையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும தரவரிசையிடம் | 103 (13 ஆகஸ்ட் 2024) 77 (தெரசி நலுவூசாவுடன், 17 செப்டம்பர் 2024) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய தரவரிசை | 109 (WS) 77 (தெரசி நலுவூசாவுடன்) (17 செப்டம்பர் 2024) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ. உ. கூ. சுயவிவரம் |
பதிலா சமிகா முகமது ரபி (Fadilah Mohamed Rafi, பிறப்பு: ஏப்ரல் 6,2005) உகாண்டாவச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[1] இவர் தனது 10 வயதில் இறகுப்பந்து விளையாட்டை விளையாடத் தொடங்கினார். 2022இல் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் உகாண்டாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு இவர் உசினா கோபுகாபேவுடன் பெண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடினார். இவர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். அங்கு இவர்கள் சோலி பிர்ச் மற்றும் லாரன் ஸ்மித் ஆகியோரிடம் தோல்வியடைந்தனர்.[2] 2023 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார்.[3] சமிகா இந்தியாவின் தமிழ்நாட்டில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி முகமது ரபி மற்றும் பர்வீன் ஷாஜி தம்பதியருக்கு முதல் குழந்தையாக பிறந்தார். பின்னர் இவருடைய ஒரு வயதில் ஒரு வருட வயதில், இவரது குடும்பம் உகாண்டாவிற்கு குடிபெயர்ந்தனர். இவர் உகாண்டா சர்வதேச இறகுப்பந்தாட்டப் போட்டியில் (2018, 2019, 2020, 2021 மற்றும் சமீபத்தில் 2022) ஐந்து முறை போட்டியிட்டார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Players: Fadilah Shamika Mohamed Rafi". இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. Retrieved 20 February 2023.
- ↑ "Commonwealth Games: Badminton - Women's Doubles results". BBC. Retrieved 21 February 2023.
- ↑ "Mohamed Rafi and Opeyori take singles golds at All-African Badminton Championships". Inside the Games. Retrieved 21 February 2023.
- ↑ Isabirye, David (2023-01-12). "KNOW YOUR STARS: Badminton teenage sensation Fadilah inspired by father". Kawowo Sports (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-10-10.