உள்ளடக்கத்துக்குச் செல்

பதின்மை வரி விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசமபாகம்-பத்திலொரு பங்கு, அண். 1770

பதின்மை வரி விதி (tithe; பண்டைய ஆங்கிலம்: teogoþa "tenth") என்பது ஒருவரின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக அல்லது வரியாக தங்களின் மதம் சார்ந்த ஆலயத்திற்கு செலுத்துவதாகும்.[1] இதனை பதின்மை, பதின்கூற்று வரி, பதின்மைப் பண்ட வரி, கோவிலக மகன்மை, பத்தில் ஒன்று பதின்மை வரி விதி என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய சூழலில் தசம பாகம் கொடுப்பது தன்னார்வத்துடன் பணமாகவோ, காசோலையாகவோ அல்லது பொருட்களாகவோ செலுத்துகின்றனர். ஆனால் வரலாற்றின் துவக்கத்தில் பார்த்தால் தசம பாகம் கொடுப்பது ஒரு பிரத்தியேக வகை சார்ந்த விவசாயத்தின் நில ஆண்டு பலனாக மட்டுமே படைத்துள்ளனர்.

கிறித்தவத்தில்[தொகு]

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாடு புத்தகத்தில் தசமபாகத்தைப் பற்றிக் கூறினாலும், புதிய ஏற்பாடு புத்தகத்தில் தசமபாகத்தைப்பற்றி, ஒருவர் சுயவிருப்பத்தின்படி கொடுத்து ஆலயத்தை ஆதரித்து வழிநடத்தலாம் என்று கூறுகிறது.[2]

நான் வந்திருக்கும் போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன். |1|கொரிந்தியர்|16:2|

அவனவன்விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன்மனதில் நியமித்தபடியேகொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க்க கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். |2|கொரிந்தியர்|9:7|

இதைதொடர்ந்து, அப்போஸ்தலர் 5:1-20 வசனங்களில் அனனியா என்ற பெயர் கொண்ட மனிதனும் அவனுடைய மனைவி சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்று, அதன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொடுத்தார்கள். ஆலயத்திற்குரிய பங்கை ஏமாற்றியதை அப்போஸ்தலனாகிய பேதுரு கேட்ட போது கீழே விழுந்து ஜீவனை விட்டதைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. David F. Burg (2004). A World History of Tax Rebellions. pp. viii.
  2. "blueletterbible.org Strong's G586". Blue Letter Bible.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதின்மை_வரி_விதி&oldid=3498674" இலிருந்து மீள்விக்கப்பட்டது