எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதிர்-திருத்தந்தை
பதின்மூன்றாம் பெனடிக்ட்
மறைமாவட்டம்அவிஞ்ஞோன் பிரான்சு
தேர்வு28 செப்டம்பர் 1394
ஆட்சி துவக்கம்11 அக்டோபர் 1394
முடக்கப்பட்டது12 மார்ச் 1403
ஆட்சி முடிவு23 மே 1423
முன்னிருந்தவர்ஏழாம் கிளமெண்ட்
பின்வந்தவர்எட்டாம் கிளமெண்ட்
எதிர்-பதவி வகித்தவர்திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ்
பிற பதவிகள்காஸ்மெதியனின் கர்தினால்-திருத்தொண்டர்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு3 அக்டோபர் 1394
ஜீன் தெ நூஃப்செத்தெல்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு11 அக்டோபர் 1394
ஜீன் தெ நூஃப்செத்தெல்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது20 டிசம்பர் 1375
கர்தினால் குழாம் அணிகர்தினால்-திருத்தொண்டர்
பிற தகவல்கள்
இயற்பெயர்பெத்ரோ மார்டினிஸ் தெ லூனா யி பிரேஸ் தெ கோடோர்
பிறப்பு25 நவம்பர் 1328
லூசா, அரகோன்
இறப்பு1423 (அகவை 94–95)
பினிஸ்கோலா, அவிஞ்ஞோன்
வகித்த பதவிகள்அவிஞ்ஞோனின் திருத்தூதரக மேளாலர் (28 செப்டம்பர் 1394–1398)
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் மற்றும் எதிர்-திருத்தந்தையர்கள்

பதின்மூன்றாம் பெனடிக்ட், இயற்பெயர் பெத்ரோ மார்டினிஸ் தெ லூனா யி பிரேஸ் தெ கோடோர் (25 நவம்பர் 1328–23 மே 1423), என்பவர் அரகோனிய உயர் குடியினரும், கத்தோலிக்க திருச்சபையால் எதிர்-திருத்தந்தை என கருதப்படுபவரும் ஆவார். இவர் மேற்கு சமயப்பிளவின்போது (1378–1417) அவிஞ்ஞோன் நகரிலிருந்து ஆட்சி செய்தார்.

1328ஆம் ஆண்டு லூசா, அரகோனில் இவர் பிறந்தார். நன்கு கல்வி கற்ற இவர் மோந்துபேலியர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி இவரை காஸ்மெதியனின் கர்தினால்-திருத்தொண்டராக 20 டிசம்பர் 1375இல் உயர்த்தினார்.

பெனடிக்டின் திருப்பொழிவு

மேற்கு சமயப்பிளவு 1378இல் நிகழ்ந்தபோது இவர் தனது ஆதரவை எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்டுக்கு அளித்தார். கிளமெண்டின் இறப்புக்குப்பின்பு அவரின் ஆதரவு கர்தினால்களால் ஒற்றுமை ஏற்படின் பதவி விலக வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இவர் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாக்குறுதியினை இவர் கடைபிடிக்கவில்லை. பிரென்சு அரசு வற்புருத்தியும் இவர் கேளாததால் இவரின் இல்லம் அரசால் 1398இல் கைப்பற்றப்பட்டது.[1] இவரின் 23 ஆதரவு கர்தினால்களுல் 18 பேர் இவரை கைவிட்டனர்.

1403இல் இவர் பிராவின்சு நகருக்கு தப்பியோடினார். எனினும் ஓர்லியான்சின் லூயிசுவினால் பிரான்சின் உதவியினை இவர் திரும்பப்பெற்றார். 1407இல் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியுடன் இவர் நடத்திய பேச்சுவார்த்தை தேல்வியுற்றதால் 1408இல் பிரென்சு அரசு இக்குழப்பத்தில் தாம் யாருக்கும் உதவாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.

உடண்பாடு எட்ட 1409இல் கூடிய பீசா பொதுச்சங்கம் சிக்களை இன்னமும் அதிகப்படுத்தும்படியாக ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக்கியது. இவர் இதனை ஏற்கவில்லை. ஜூலை 26, 1417இல் நடந்த காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தால் இவர் திருச்சபையிலிருந்து விலக்கப்படார். அப்போது திருத்தந்தை பதவி கோரிய பன்னிரண்டாம் கிரகோரி மற்றும் இருபத்திமூன்றாம் யோவான் இச்சங்கத்தின் முடிவை ஏற்றனர் என்பதும் இவர் மட்டுமே ஏற்கவில்லை என்பதும் குறிக்கத்தக்கது. திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டதால் இவர் தனது அனைத்து அரச உறிமைகளையும் இழந்தார். இசுக்கொட்லாந்து மற்றும் பிரான்சின் அர்மாக்னாக் நகர் மட்டுமே இவரை ஆதரித்தன.

இவர் திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ், திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் மற்றும் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி ஆகிய மூன்று தொடர் உரோமை திருத்தந்தையருக்கு எதிராக ஆண்டார். மேலும் பீசா பொதுச்சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் மற்றும் எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானையும் இவர் ஏற்கவில்லை. ஒற்றுமை ஏற்பட நவம்பர் 1417இல் தேர்வு செய்யப்பட்ட திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டினை இவர் மட்டுமே ஏற்கவில்லை.

1422 நவம்பரில் நான்கு புதிய கர்தினால்களை நியமிக்கும் அளவுக்கு இவர் திருத்தந்தை பதவிக்கு உரிமை கொன்டாடினார். இவர் 23 மே 1423இல் தம் இறப்பு வரையிலும் மனம்மாறவில்லை.

அடக்கம்[தொகு]

பதின்மூன்றாம் பெனடிக்ட் முதலில் பின்ஸ்கோலா கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரின் உடல் அவரின் பிறந்த ஊரான லூசாவுக்கு மாற்றப்பட்டது. அங்கு நடந்த எசுப்பானிய அரசின் வாரிசு சன்டையில் இவரின் உடலில் மண்டையோடு மட்டுமே மிஞ்சியது. அது தற்சமயம் அரகொனின் கொன்தெஸ் தெ அர்கிலோ அரண்மனையில் பாதுகாக்கப்படுகின்றது.

இவர் தனது ஆட்சியில் செய்த ஒரே குறிக்கத்தக்க நல்ல செயல் 1412இல் இசுக்கொட்லாந்து நாட்டின் முதல் பல்கலைக்கழகத்தை நிருவ ஆணையிட்டது ஆகும். இன்றளவும் இவரின் மரபுச்சின்னம் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழக சின்னத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Richard P. McBrien, Lives of the Popes, (HarperCollins, 1997), 250.