பதா ( பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில் ரீதியாக பதா (ஆங்கிலம் : Bada ) என்று அழைக்கப்படும் சோய் சுங்-கீ என்பவர் பிப்ரவரி 28 இல் பிறந்த ஒரு தென் கொரிய பாடகர், இசையமைப்பாளர் மற்றும் இசை நடிகை ஆவார். அவர் 1997 இல் தென் கொரியாவின் எஸ்.இ.எஸ் என்ற இசைக்குழுவின் பெண் உறுப்பினராக அறிமுகமானார். டிசம்பர் 2002 இல் எஸ்.இ.எஸ் கலைக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 2003 இல் "எ டே ஆஃப் ரினியூ" என்ற தனிப்பாடல் தொகுப்பை வெளியிட்டார் .

பாடல்களைப் பதிவுசெய்தல் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதைத் தவிர, நோட்ரே-டேம் டி பாரிஸ், 200 பவுண்ட்ஸ் பியூட்டடி, லீகலி ப்ளாண்ட், மற்றும் மொஸார்ட் உள்ளிட்ட மேடை இசைக்கலைஞர்களின் அசல் மற்றும் கொரிய பதிப்புகளில் பங்கேற்றதன் மூலம் ஒரு நடிகையாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மூன்றாவது இசை விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற அவர், இன்றுவரை பத்து இசை நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சோய் சுங்-கீ 1980 பிப்ரவரி 28 அன்று பிறந்தார், அவரது தந்தை சோய் சா - வோல், இவர் கொரிய பன்சோரியின் பின்னணி கொண்ட ஒரு ட்ராட் இசைப் பாடகர் ஆவார்.[2] அவரது குழந்தை பருவத்தில் நிதிப் பிரச்சனைக் காரணமாக, குறிப்பாக அவரது தந்தை நோய்வாய்ப்பட்ட பிறகு, அவர் அறிமுகமாகும் வரை ஒன்பது ஆண்டுகள் உள்ளூர் தேவாலயத்தால் வழங்கப்பட்ட ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தார். இளைஞர்களுக்கான சமீபத்திய தொடர் சொற்பொழிவுகளில், அவர் தனது ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி உரையாற்றியுள்ளார், மேலும் அவர்களின் கனவுகளைப் பெறுவதில் அவர்களின் பின்னணி ஒரு தடையாக மாறக்கூடாது என்று மாணவர்களை ஊக்குவித்துள்ளார்.[3][4]

பதா லீ சூ- மேன் என்பவரால் முன்மொழியப்பட்டு எஸ்.எம் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தில் நுழைந்தார். எஸ்.இ.எஸ் நிறுவனத்தின் தலைவராகவும், முன்னணி பாடகராகவும் அறிமுகமானார். கே-பாப் ஐடோல் குழுவின் முதல் வெற்றிகரமான பெண்ணாக இருந்தார். பதா டான்குக் பல்கலைக்கழகத்தில் நடிப்பைப் படித்தார்.[5]

தொழில்[தொகு]

பாடா 1997 இல் எஸ்.இ.எஸ் நிறுவனத்தில் அறிமுகமானார். இந்த குழு 1997 நவம்பர் 1, அன்று அவர்களின் முதல் பாடல் தொகுப்பான ஐ யாம் யுவர் கேர்ல் என்பதை வெளியிட்டது. இந்த குழு பின்னர் அதிக விற்பனையான கே-பாப் பெண்கள் குழுவாக மாறியது. அறிமுகமானதிலிருந்து, குழு ஐந்து கொரிய ஆல்பங்களையும் இரண்டு சப்பானிய ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளது. 2002 ன் முடிவில் பிரண்ட்ஸ் பிபோர் பிரேக்கிங் அப் இசைத் தொகுப்பை வெளியிட்டது. இக்குழுவின் உறுப்பினர்கள், பதா மற்றும் நடிகை யூஜின் ஆகியோர் எஸ்.எம் என்டர்டெயின்மென்டில் இருந்து பிரிந்தனர். ஆனால் பாடகர் ஷூ எஸ்.எம் என்டர்டெயின்மென்ட்டில் 2006 வரை பணிபுரிந்தார்.

பதா வூங்சிங் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ஒரு பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[6] 2003 ஆம் ஆண்டில், பதா தனது முதல் தனிப்பாடல் தொகுப்பான ஏ டே ஆஃப் ரினியூவை சுமார் 130,000 பதிவுகளை விற்றுவிட்டதாக கொரியாவின் இசைத் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. பதா 2003 ஆம் ஆண்டில் பதா என்ற பாடகரைப் பற்றிய காதல் கதையான பெப்பர்மிண்ட் என்ற இசை நிகழ்ச்சியுடன் இசை அரங்கில் இறங்கிய முதல் கொரிய ஐடோல் பாடகராவார்.[7] இது அவருக்காக படைப்பாளரும் தயாரிப்பாளருமான லீ யூரி எழுதியது, அவர் தைபூன், மதர் அன்ட் வின்ட்டர், சொனாட்டா போன்ற பிற இசைத் திட்டங்களுக்கும் பொறுப்பானவர்.[8] 2004 ஆம் ஆண்டில், அவரது இரண்டாவது பாடல் தொகுப்பான அரோரா வெளியிடப்பட்டது. இது சுமார் 23,000 பிரதிகள் விற்றுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2017 ஜனவரி 13 அன்று, தன்னைவிட ஒன்பது வயது இளையவரான ஒரு உணவக உரிமையாளரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரது நிறுவனம் உறுதிப்படுத்தியது.[9] அவரது திருமணம் மார்ச் 23, 2017 அன்று சியோலில் நடைபெற்றது.[10][11]

குறிப்புகள்[தொகு]

  1. "네이버 인물정보". Naver. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. "마라톤 창법 신공(神功)? 달 그림자 보며 터득했죠". 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் August 31, 2013.
  3. "바다 "꿈을 위해 어떤 노력을 하고 있는가"". Asiae. 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013.
  4. "Bada tells students to follow their dreams". MSN Malaysia. Archived from the original on 5 October 2013. பார்க்கப்பட்ட நாள் 6 September 2013.
  5. "바다, 12년만에 학사모…18일 단국대 졸업". Nate News. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
  6. "Web firewall security policies that are contrary to the request / response has been blocked". M.etnews.com. பார்க்கப்பட்ட நாள் 2014-06-04.
  7. "[관람석]뮤지컬 '페퍼민트'". 주간경향. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
  8. "'뮤지컬 프로듀서 이유리' 승부사 기질로 무장한 흥행 보증수표". Hankooki. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  9. Lee Han-soo (January 13, 2017). "K-pop diva Bada to wed entrepreneur in March" (in ko). The Korea Times. http://www.koreatimes.co.kr/www/art/2017/02/688_222016.html. பார்த்த நாள்: February 2, 2017. 
  10. Eom Da-sol (March 23, 2017). "K-pop diva Bada ties knot with entrepreneur". The Korea Times. https://www.koreatimes.co.kr/www/art/2017/03/682_226221.html. பார்த்த நாள்: March 26, 2017. 
  11. Jie Ye-eun (March 23, 2017). "S.E.S' Bada walks down aisle". KPop Herald. http://kpopherald.koreaherald.com/view.php?ud=201703231906445432303_2. பார்த்த நாள்: March 26, 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதா_(_பாடகர்)&oldid=2868481" இலிருந்து மீள்விக்கப்பட்டது