உள்ளடக்கத்துக்குச் செல்

பதவி நீக்கல் சடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பிரட் டிரேஃபசு இராணுவப் பதவிகளின் இருந்து நீக்கப்படுதல்

பதவி நீக்கல் சடங்கு (Cashiering, அல்லது degradation ceremony), என்பது உயர் பதவி வகிக்கும் ஓர் அதிகாரியை முறைகேடுகள் காரணமாகப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சடங்கு அல்லது தண்டனை ஆகும்.

இந்தத் தண்டனை பொதுவாக இராணுவத்தில் உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இது பதவி நீக்கச் சடங்காக நடத்தப்படுவது வழக்கம். பொதுவாக இந்த களங்கம் உண்டாக்கும் சடங்கின் போது அவருடைய இராணுவச் சின்னங்கள் பறிக்கப்படும்.

இச்சடங்கு சில வேளைகளில் பொது மக்கள் முன்னிலையில் இடம்பெறும். இராணுவ அதிகாரியின் சீருடையில் அணியப்படும் தோள்பட்டை அடையாளம் கிழிக்கப்படும். அவருடைய அதிகாரச் சின்னம் மற்றும் விருதுகள் பிடுங்கி எடுக்கப்படும். அவர் தனது சீருடையில் செருகியிருக்கும் வாள் முறிக்கப்படும். தொப்பி அகற்றப்படும். பதவி உயர் நிலைப் பதக்கங்கள் பறித்து எடுக்கப்பட்டு நிலத்தில் மோதி அடிக்கப்படும்.

இந்த இராணுவ மரபு வழித் தண்டனையானது சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிக்கு அவமானத்தையும் சமூகத்தில் மறக்க முடியாத பங்கத்தையும் ஏற்படுத்துவதாக அமையும்.

வரலாற்றில் இவ்வாறு இராணுவப் பதவிகள் பறிக்கப்பட்டோர் பலர் உள்ளனர். அவர்களில், ஆல்பிரட் டிரேஃபசு, பிலிப்பி பெட்டே, தொமசு கொக்ரேன் பிரபு, மற்றும் பிரான்சிசு மிச்செல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இரட்யார்ட் கிப்ளிங்கின் "டானி டீவர்" என்ற கவிதையில் பிரித்தானிய இந்தியாவில் பிரித்தானியச் சிப்பாயொருவர் தூக்கிலிடப்படும் முன்னர் அவரது இராணுவப் பதவி இவ்வாறாகப் பறிக்கப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதவி_நீக்கல்_சடங்கு&oldid=1356574" இலிருந்து மீள்விக்கப்பட்டது