உள்ளடக்கத்துக்குச் செல்

பதரௌனா

ஆள்கூறுகள்: 26°54′N 83°59′E / 26.9°N 83.98°E / 26.9; 83.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதரௌனா
நகரம்
அரண்மனை நுழைவாயில்
அரண்மனை நுழைவாயில்
அடைபெயர்(கள்): பவா
பதரௌனா is located in உத்தரப் பிரதேசம்
பதரௌனா
பதரௌனா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதரௌனா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°54′N 83°59′E / 26.9°N 83.98°E / 26.9; 83.98
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்குஷிநகர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பதரௌனா நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்6.89 km2 (2.66 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்49,723
 • தரவரிசை300+
 • அடர்த்தி7,200/km2 (19,000/sq mi)
மொழி
 • அலுவல்இந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
274304
தொலைபேசி குறியீடு05564
வாகனப் பதிவுUP-57
இணையதளம்https://kushinagar.nic.in/

பதரௌனா (Padrauna), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 344 கிலோ மீட்டர் தொலைவிலும், கோரக்பூருக்கு வடகிழக்கே 73.8கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் தெற்கே 21.7 கிலோ மீட்டர் தொலைவில் கௌதம புத்தர் மறைந்த இடமான குசிநகர் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

நெடுஞ்சாலை

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண்727 இந்நகரம் வழியாகச் செல்கிறது.

தொடருந்து நிலையம்

[தொகு]

பதரௌனா தொடருந்து நிலையம்[2]சாப்ரா, கோரக்பூர், லக்னோ, சித்தார்த்தநகர், தில்லி மற்றும் ஜலந்தர் நகரங்களை இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 6786 குடியிருப்புகளும் கொண்ட பதரௌனா நகரத்தின் மக்கள் தொகை 49,723 ஆகும். அதில் 25,700 ஆண்கள் மற்றும் 24,023 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 935 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,587 மற்றும் 362 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 70.02%, இசுலாமியர் 29.38%, கிறித்தவர்கள் 0.32% மற்றும் பிற சமயத்தினர் .013% வீதம் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Class III towns and urban agglomerations". Census India. Retrieved 21 July 2024.
  2. Padrauna Train Station
  3. Padrauna Population, Religion, Caste, Working Data Kushinagar, Uttar Pradesh - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதரௌனா&oldid=4243038" இலிருந்து மீள்விக்கப்பட்டது