பதம் (தமிழ் இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல்லைப் பதம்பிரித்து பார்க்கும் அறிவியல் கண்ணோட்டத்தை நன்னூல் இலக்கணம் புதுமையாகப் புகுத்தியுள்ளது. இது சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளை, roots of words பகுத்துப் பார்க்கிறது. [1] மேலும் பகுத்தால் பயனில்லாதல் போகும் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களைப் பகாப்பதம் என்றும்,[2] பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்றெல்லாம் பிரிக்கக்கூடியதாக அமைந்துள்ள சொற்களை, பகுபதம் என்றும் நன்னூல் குறிப்பிடுகிறது.

தொல்காப்பியம் முன்னோடி[தொகு]

  • தொல்காப்பியம் இதற்கு முன்னோடியாக ஆங்காங்கே கால்கோள் செய்துள்ளது. தொல்காப்பியம் காட்டும் உரிச்சொற்களை நன்னூல் பண்பின் பகாப்பதங்களாகக் கொண்டுள்ளது. [3]
  • பால் உணர்த்தும் ஈறுகளைத் தொல்காப்பியம் வரையறை செய்து காட்டுகிறது. இவற்றை நன்னூல் விகுதி என்று குறிப்பிடுகிறது.
  • வினைச்சொல் காலம் காட்டும் எனக் கூறும் தொல்காப்பியம், காலம் காட்டும் இடைச்சொல்லைக் காலம் கொள்ளும் மெய்ந்நிலை என்று குறிப்பிடுகிறது. நன்னூல் இதனைக் காலம் காட்டும் இடைநிலைகள் என்று விளக்குகிறது இலக்கண நூல்கள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. நன்னூல் பதவியல்
  2. நன்னூல் 131
  3. நன்னூல் 135
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதம்_(தமிழ்_இலக்கணம்)&oldid=3724057" இலிருந்து மீள்விக்கப்பட்டது