பதம் (சொல் விளக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும். அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை.

 • பதம் செய்த உணவு
பதம் என்னும் சொல் சங்ககாலத்தில் சமைத்த தானிய உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படுத்தப்படும் குழம்பு, பொறியல் முதலான கூட்டுப் பொருள்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. [1].இதனை இக்காலத்தில் பதார்த்தம் என வழங்குகிறோம். அர்த்தம் எனும் சொல் பாதி என்னும் பொருளைத் தரும். பதம் பாதி, அதனோடு சேரும் அர்த்தம் பாதி என அமைவது பதார்த்தம்.
 • நடத்தை
பதமாக நடந்துகொள்ளுதல் [2] எண்பதத்தான் பண்புடைமை [3]
 • தனிசொல்
பெயராகவோ, வினையாகவோ, பகுபத உறுப்புக்களாகவோ அமைந்து விளங்கும் சொல். நன்னூல் தனிச்சொல்லைப் பதம் எனக் குறிப்பிடுகிறது.
நெல்லை உணர்த்தும் சொற்களில் ஒன்று சொல்.
நெல்லைப் பதப்படுத்தி ஆக்கும் சோறும் பதம் எனப்படும்.
தமிழ்ச்சொல்லைப் பகுதி, விகுதி என்றெல்லாம் பதப்படுத்திக் காட்டுவது நன்னூலிலுள்ள பதவியல்.
இந்த வகையில் பதம் என்பது தமிழ்ச்சொல். [4]

அடிக்குறிப்பு[தொகு]

 1. பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறநானூறு 1-16)
 2. "எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்
  தன் பதத்தால் தானே கெடும்". (திருக்குறள் 548),
 3. "எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்மாட்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு" (திருக்குறள் 991)
 4. இதனை வடமொழி ஆர்வலர் வடசொல் என்பர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதம்_(சொல்_விளக்கம்)&oldid=1258178" இலிருந்து மீள்விக்கப்பட்டது