பண்பாட்டு அதிர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துப்பாக்கிகள் மற்றும் குதிரைகளுடன் வெற்றியாளர்களுடனான சந்திப்பு ஆஸ்டெக்குகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, எனவே அவர்கள் ஐரோப்பியர்களை கிழக்கிலிருந்து வந்த தீர்க்கதரிசிகளுடன் குழப்பினர்.
மாதிரியின் படி, மக்களுக்கு ஆரம்பத்தில் (1) தேனிலவு காலம் மற்றும் பின்னர் (2) மாற்றம் காலம், அதாவது கலாச்சார அதிர்ச்சி இருக்கும். ஆனால் பின்னர், மக்கள் மாற்றியமைக்கத் தொடங்குவார்கள் (3) (புள்ளியிடப்பட்ட வரி புதிய கலாச்சாரத்தை சிலர் வெறுப்பார்கள் என்பதைக் காட்டுகிறது). (4) பண்டைய கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்கள் இடத்திற்குத் திரும்பும் சிலரைக் குறிக்கிறது.

பண்பாட்டு அதிர்ச்சி (cultural shock) என்பது, இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயர்தலாலோ, ஒரு சமூகச் சூழலிலிருந்து இன்னொரு சமூகச் சூழலுக்குச் செல்வதாலோ, இன்னொரு வாழ்க்கை முறையைக் கைக்கொள்ள வேண்டி ஏற்படுவதாலோ, பழக்கமில்லாத வாழ்க்கை முறை அனுபவத்துக்கு உள்ளாகும்போது, ஒருவருக்கு ஏற்படக்கூடிய தன்னிலையிழத்தல் உணர்வு ஆகும்.[1] பண்பாட்டு அதிர்ச்சிக்கான முக்கியமான காரணிகளுள் ஒன்று, தனியாள் ஒருவர், அறிமுகமற்ற புதிய சூழலுக்குச் செல்வதாகும்.

அளவுக்கதிகமான தகவல்கள், மொழி தெரியாமை, தலைமுறை இடைவெளி, தொழில்நுட்ப இடைவெளி போன்றவை, பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தும் பொதுவான சிக்கல்கள்.[2] எந்தவொரு சமுதாயத்தைச் சேர்ந்த தனிமனிதரும் பண்பாட்டு வேறுபாடுகளால் தாக்கத்துக்கு உள்ளாவதால், பண்பாட்டு அதிர்ச்சியைத் தடுக்க முடியாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Macionis, John, and Linda Gerber. "Chapter 3 - Culture." Sociology. 7th edition ed. Toronto, ON: Pearson Canada Inc., 2010. 54. Print.
  2. Pedersen, Paul. The Five Stages of Culture Shock: Critical Incidents Around the World. Contributions in psychology, no. 25. Westport, Conn: Greenwood Press, 1995.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டு_அதிர்ச்சி&oldid=3694675" இலிருந்து மீள்விக்கப்பட்டது