பண்ணை விசித்திரம்
Appearance
பண்ணை விசித்திரம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]
மாதர் இருவர் நூலின் தலைமகள்களாக அமைய, இறைவனை வழிபடுதல், தம் நாட்டைப் பற்றிக் கூறல், நாட்டு நிலத்தில் அமையும் திணைமயக்கம், பாயும் ஆறு, மேகம் மழை பொழிதல், இறைவன் அருளால் நெல், மாடு, நெல் சேமிக்கும் கோட்டை ஆகியவற்றின் வளம் பெருகுதல், நாற்று நடுதல், ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ளுதல் முதலான பல செய்திகள் வரும்படி பாடப்படும் நூல் பண்ணை விசித்திரம் என்று கூறப்படும் இலக்கியம் ஆகும். முக்கூடல் பள்ளு என்னும் நூலை இதன் இலக்கியமாகக் கொள்ளலாம்.
மாதர் இருவர் இறைவன் நாடு மீறு திணை
ஓதும் நதி மேகம் மழை ஒள் இறைவன் – நீதியால்
நெல் மாடு கோட்டை நாறு இட்டல் நின்று ஏசல்
அன்ன சிந்து பண்ணை விசித்திரம். [2]
மேற்கோள்
[தொகு]- ↑ பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 487
- ↑ நூற்பா 19