பண்ணை இயந்திரமயமாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்றைய வேளாண்மையில் பண்ணை வேலைகளுக்கு ஆட்கள் தேவை அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆகும் செலவு அதிகரித்து வருகிறது. மேலும் ஆட்களின் செயல்திறனும் மற்றம் நேரத்தை முடிக்க கூடிய ஆற்றலும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பயிர்களின் சாகுபடி செலவு அதிகரித்து வருவதோடு விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தச் சூழ்நிலையில் வேளாண் பணிகளை இயந்திரமயமாக்குவது மிக அத்தியாவசியமான ஒன்றாகும். பண்ணை இயந்திரமாக்கல் எனபது பண்ணை பணிகளைத் திறம்பட முடித்தல், காலத்தே முடித்தல், துல்லிய விதைப்பு, உரம் பரப்புதல் மற்றும் சரியான காலத்தில் அறுவடை செய்தல் இவையனைத்தும் விளைச்சலை அதிகரிக்கச் செய்வதோடு, சாகுபடி செலவையும், வேலையாட்களின் சிரமத்தையும் குறைக்கும். மேலும் வேளாண் உப பொருட்களை தரத்துடன் சரியான காலத்தில் உற்பத்தி செய்ய பண்ணை இயந்திரமாக்கல் வழிவகுக்கிறது.

பண்ணை இயந்திரமாக்கல் இன்றைய நிலை[தொகு]

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் புழக்கத்தில் பயன்படுத்தி வந்த சிறு கருவிகள், நாட்டுக் கலப்பை மற்றும் மனித ஆற்றல், கால்நடை சக்தி மூலம் செயல்படும் நீர் இறைக்கும் கருவிகளே பெரும்பாலும் வேளாண்மையில் படுத்தப்பட்டன. இவைகள் கிராம கைவினைஞரர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த கருவிகள் அனைத்தும் பகுதிக்கு பதிகு மாறுபட்டு நில அமைப்பு மற்றும் மனிதர்களுக்கு ஏற்றார்போல் உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் மண்வெட்டி, கொத்து, கடப்பாரை, நீர் இறைக்கும் வாளி போன்ற கருவிகளை உருவாக்கி விற்பனைக்கு வெளியிட்டன. இதற்கு பிறகு பல்வேறு விதமான கலப்பைகளை உருவாக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வந்தன.

பண்ணை சக்தியின் இன்றைய நிலை[தொகு]

இன்றைய நிலையில் இந்தியாவில் 7.5 லட்சம் நீர் இறைக்கும் பம்புகளும் 6 லட்சம் டிராக்டர்களும் 60000 பவர் டில்லர்களும் 4 லட்சம் கதிரடிக்கும் இயந்திரங்களும் 4.5 லட்சம் தெளிப்பான்களும் 2000 கூட்டு அறுவடை இயந்திரங்களும் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

வேளாண்மையில் நவீன பண்ணைக்கருவிகள்[தொகு]

நம்நாட்டு வேளாண்மைக்கு தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன. உழவு முதல் அறுவடை பின் செய் நேர்த்தி வரை பல்வேறு சக்திகள் மலம் இயங்கும் வண்ணம் கருவிகள் மற்றம் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரப்பட்டு வேளாண் உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகை செய்கின்றன.

உழவிற்குப் பயன்படும் கருவிகள்[தொகு]

இயற்கை கலப்பை சட்டிக்கலப்பை சட்டிப்பலுகுகள் சுழல் கலப்பை போன்றவைகள்

விதைக்கம் கருவிகள்

மாடுகளால் இயக்கப்படும் விதைக்கம் கருவி டிராக்டர் கொத்துக்கலப்பையுடன் இணைந்து விதைக்கும் கருவி நேரடி நெல்விதைக்கும் கருவி பவர் டில்லரால் இயங்கும் விதைக்கும் கருவி அகலப்பாத்தி அமைத்து விதைக்கும் கருவி குழிப்படுகை அமைத்து விதைக்கும் கருவி காற்றழுத்தத்தால் இயங்கும் விதைக்கும் கருவி சால் அமைத்து விதைக்கும் கருவி

களை மற்றும் இடை உழவு கருவிகள் வரிசை முறையில் விதைக்கப்பட்ட பயிர்களிடையே களையெடுக்க பல்வேறு கருவிகள் உள்ளன. உதாரணமாக நெல்லில் கோனோவீடர் மற்றம் இயந்திர களையெடுப்பான் போன்றவைகள் 60 செ.மீ வரிசைக்கு வரிசை இடைவெளி உள்ள பயிர்களில் களையெடுக்க விதவிதமான இயந்திர களையெடுப்பான்கள் தற்போது விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன கரும்பு சாகுபடியில் மினி டிராக்டர் களையெடுக்கும் கருவி, மண் அணைக்கவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் பருத்தி, மரவள்ளி போன்ற பயிர்களிலும் களையெடுக்கம் கருவிகள் பெருவாரியான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

பயிர் பாதுகாப்புக்கருவிகள் பயிர்பாதுகாப்பு கருவிகளான தெளிப்பான்கள் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கையால் இயங்கும் தெளிப்பான் மற்றும் இன்ஜினால் இயங்கும் தெளிப்பான்கள் மிக பிரசித்தம். இது மட்டுமல்லாமல் டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயங்கும் தெளிப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பவர் டில்லர் மற்றும் டிராக்டர் மூலம் இயங்கும் மருந்து தெளிக்கும் கருவிகளை பயன்படுத்த சாகுபடி ஆரம்ப கட்டத்திலேயே திட்டம் வகுத்தால்தான் மருந்து தெளிக்கும் செலவை வெகுவாக குறைக்கலாம்.

அறுவடைக்கருவிகள் மேற்சொன்ன பணிகளைக் காட்டிலும் மிக சிரமமான பணியும். அதிக ஆட்செலவும் உள்ள பணி அறுவடையாகும். பெரும்பாலும் விவசாய பணிகளுககு பயன்படுத்தப்படும் ஆட்களில் 25 சதவீதம் அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு பல்வேறு அறுவடைக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கருவிகள் கூட்டு அறுவடை இயந்திரம் (நெல்லுக்க உகந்தது) நிலக்கடலை அறுவடை இயந்திரம் மஞ்சள் அறுவடை இயந்திரம் சோளத்தட்டு அறுவடை இயந்திரம் மரவள்ளி கிழங்கு தோண்டும் கருவி கரும்பு அறுவடை இயந்திரம்

மேற்காணும் அறுவடை கருவிகளை பயன்படுத்த டிராக்டரை செலுத்த தேவையான இடைவெளி இன்றியமையாததாகும். தகுநத் தருணத்தில் பயன்படுத்தினால்தான் அறுவடையின்போது ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.

[1]

  1. உழவரின் வளரும் வேளாண்மை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகக்ழகம். கோவை