பண்ணைவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்ணைவிளை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் கிராமத்தில் அடங்கிய குக்கிராமம் ஆகும்.

சிறப்பு[தொகு]

பனைமரங்கள் நிறைந்து அழகு சேர்க்கும் இக்கிராமம் கிழங்கு, பதநீர், நுங்கு என்பவற்றுக்கு பேர்போனது.மேற்கே பெருங்குளம் கடல்போல் காட்சியளிக்கின்றது. ஒரு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பபள்ளி மற்றும் கால்நடை மருத்துவமனை என்பன இங்கு உண்டு.பண்ணைவிளை பங்களாவில் உள்ள கிறிஸ்து ஆலயம் வெள்ளைக்காரர்களால் கட்டப்பட்டது. பண்ணைவிளையில் பரி.திரித்துவ ஆலயம் 1923ல் கட்டி முடிக்கப்பட்டது.

ஏமி கார்மிக்கல் அம்மையார் இந்த பகுதிகளில் பணிவிடை செய்து தேவதாசி ஒழிப்பிற்கு அரும்பாடுபட்டார்கள்.

இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம், மதுரை பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர், நெல்லை ஜெபராஜ், அறிவர் தியோடர் வில்லியம்ஸ் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். அதிகமான கிறிஸ்தவர்களால் நிறைந்துள்ள கிராமம் ஆகும். கட்டிடக்கலைக்கு சிறப்பு சேர்க்கும் கொத்தனார்கள் நிறைய இருக்கின்றார்கள். தக்கர் மேல்நிலைப்பள்ளி மற்றும் TNDTA ஆரம்ப பள்ளி உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணைவிளை&oldid=752487" இலிருந்து மீள்விக்கப்பட்டது