பண்ணன் ( நாவலாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்ணன் என்பவர் தமிழ் நாவலாசிரியர்களுள் ஒருவர்.இவர் திருமூர்த்தி- மலையம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர்.

இளமைப் பருவம்[தொகு]

இவர் கல்லூரியில் தமிழ் பயின்ற காலத்தில் புறநானூற்றுப் பாடலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அந்நூலுள் வரும் சிறுகுடி கிழார் பண்ணன் எனும் வள்ளல் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பண்ணன் என்று மாற்றிக்கொண்டார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

இவர் எட்டாம் வகுப்பு பயின்றபோது மாவீரன் அலெக்சாண்டரை எதிர்த்த போராஸ் என்பவனின் வரலாற்றை ஓரங்க நாடகமாக எழுதி நடித்தார். பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய இவர்,கண்ணதாசனின் தென்றல் இலக்கியப் போட்டிக்காகக்,காதல் துறவி எனும் காப்பியத்தையும்,ஆனந்த விகடன் நாடகப்போட்டிக்காகத்,தலையாலங்கானத் தலைவன் எனும் நாடகத்தையும் எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

இவர் எழுதிய நாவல்கள் மொத்தம்-11. அவை

 • தெய்வத்தின் குரல் ( முதல் நாவல்)
 • பிராமணன் இங்கே
 • மண்வாக்கு * செம்பவளம்
 • கோயில் என்ன செய்யும்
 • இளமை மலர்ந்தது
 • தடைக்கல் * சாலைவிதிகள்
 • ஒத்துழைப்பு
 • நாற்றங்கால்
 • பெருந்தேவி (வரலாற்றுப் புதினம்)

காப்பியங்கள்[தொகு]

 • செந்நீரோவியம்
 • காதல் துறவி

சிறுகதைகள்:

 • பண்ணனின் சிறுகதைகள் (தொகுப்பு)
பரிசுகளும் விருதுகளும்[தொகு]

இவர் எழுதிய, தாய்ப்பால்,துறவி உள்ளிட்ட நான்கு நூல்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளது. சென்னை அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சார்பில்,இவரது செந்நீரோவியம் எனும் காப்பியத்திற்குச் சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியுள்ளது. மீண்டும் கவிக்கொண்டல் எனும் இலக்கிய இதழின் சார்பில் நடந்த விழாவில் இவருக்குக் காவியப் பாவலர் எனும் விருதும் சென்னைப் பாவேந்தர் பாசறை சார்பில், பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் எனும் விருதும் வழங்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

1) பாக்யமேரி," பண்ணன் புதினங்களில் சமுதாய மாற்றம்"- பூவேந்தன் பதிப்பகம் திருப்பூர் 2) முனைவர் பாக்யமேரி " வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு"- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2008.