வல்லார் கிழான் பண்ணன்
Appearance
(பண்ணன் (வல்லார் கிழான்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வல்லார் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் என்று. இதன் ஆட்சி உரிமையைப் பெற்றிருந்த மன்னன் வல்லார் கிழான்.
- பாடிய புலவர்
- சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் என்னும் புலவர் வல்லார் கிழான் பண்ணனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[1]
- வல்லார் நலம்
- பாடலில் இந்த ஊரின் பெயர் "கடிமிளை வலாஅர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரைச் சுற்றிலும் காவல்காடுகள் இருந்தன. வல்லார்நாடு குன்றுகளை மிகுதியாக உடையது.
- வல்லார் குன்றத்து மகளிர்
- இங்கு வாழ்ந்த எயிற்றி ஒருத்தியின் அன்பு மகள் தன் வீட்டு விளா மரத்தின் கீழ் இருந்த வெட்ட வெளியில் குட்டியானை ஒன்றோடு விளையாடிக்கொண்டிருந்தாளாம்.
- பண்ணன் போராற்றல்
- இவனது அம்பில் எப்போதும் புலவுக்கறை படிந்திருக்குமாம்.
- பண்ணன் கொடை
- இவனை நாடி வரும் பாணர்கள் குடும்பம் தம் காலமெல்லாம் வறுமை இல்லாமல் வாழும் வகையில் பண்ணன் பரிசில்களை நல்குவானாம்.
- மேலும் பார்க்க
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பாடல் புறநானூறு 181.