பண்ணந்தூர் பனை மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை வல்லிபுரத்தில் உள்ள கிளையுள்ள பனை

பண்ணந்தூர் பனை மரம் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூர் என்ற ஊரில் உள்ள கிளையுள்ள ஒரு பனை மரமாகும். இந்தப் பனைமரம் உள்ளதாலேயே இந்த ஊர் பண்ணந்தூர் என அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்த மரம் 200 ஆண்டுகள் பழமையானதாகவும், 100 கிளைகளுடன் கூடியதாகவும் உள்ளது. அதன் அருகே அதே மரத்தின் விதையில் இருந்து முளைத்த இன்னொரு மரமும் அவ்வாறே கிளைகளுடன் வளர்ந்து வருகிறது.[1] இந்தப் பனை மரமானது மரபியல் மாற்றத்தினால் உருவான பனை மரமாகும். பனை மரங்கள் எல்லாம் கிளைகளற்று நேராக வளரக்கூடியன என்றாலும் மிக அரிதாக சில பனை மரங்கள் கிளைகளுடன் கிளைத்த நிலையில் வளர்வதுண்டு. இதன் வித்துக்களை எடுத்து நட்டாலும் பெரும்பாலும் முளைப்பதில்லை.

இது போன்ற கிளையுள்ள பனை மரமானது இலங்கையின் வல்லிபுரம் என்ற ஊரிலில் காணப்படுகிறது,

மேற்கோள்கள்[தொகு]

  1. "100 கிளைகளுடன் ஒரு பனைமரம்". கட்டுரை. தி இந்து தமிழ் (2018 மார்ச் 7). பார்த்த நாள் 4 ஏப்ரல் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணந்தூர்_பனை_மரம்&oldid=3030382" இருந்து மீள்விக்கப்பட்டது