பண்டைய நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள், எச்சங்கள் சட்டம்
பண்டைய நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள், எச்சங்கள் சட்டம் | |
---|---|
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
பண்டைய நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள், எச்சங்கள் சட்டம் (அல்லது ப. நி. தொ. த. எ. சட்டம்-AMASR Act) என்பது இந்திய நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இது பண்டைய மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களையும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் தளங்களையும், எச்சங்களையும் பாதுகாக்கவும், தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை ஒழுங்குபடுத்தவும், சிற்பங்கள், பிற ஒத்த பொருட்களுக்குப் பாதுகாப்பினை வழங்குகிறது. இச்சட்டம் 1958-ல் நிறைவேற்றப்பட்டது.[1]
இந்தச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்தியத் தொல்லியல் துறை செயல்படுகிறது.[2]
நினைவுச்சின்னத்திலிருந்து 100 மீட்டருக்குள் உள்ள பகுதி தடைசெய்யப்பட்ட பகுதி என்று விதிகள் தெரிவிக்கின்றன. மேலும், நினைவுச்சின்னத்திலிருந்து 200 மீட்டருக்குள் உள்ள பகுதி ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்களின் பழுது அல்லது மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அதற்கு முன் அனுமதி தேவைப்படுகிறது.[3]
2023ஆம் ஆண்டில் இந்தியக் கலாச்சார அமைச்சர் இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958" (PDF). Archaeological Survey of India. Retrieved 17 April 2015.
- ↑ "Monuments". Archaeological Survey of India. Retrieved 17 April 2015.
- ↑ JS Iftekhar (2012-11-07). "Extension of temple illegal - ASI". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/cities/Hyderabad/extension-of-temple-illegal-asi/article4073253.ece.
- ↑ Prakash, Priyali (2023-03-01). "Explained | What is the Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment) Bill?" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/explained-what-is-the-ancient-monuments-and-archaeological-sites-and-remains-amendment-bill/article66563555.ece.