பண்டைய கெமெர் நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்டைய கெமெர் நெடுஞ்சாலை ( Ancient Khmer Highway) என்பது கம்போடியாவில் உள்ள அங்கோர் மற்றும் தற்பொழுது தாய்லாந்தில் உள்ள பிமாய் நகரங்களுக்கு இடையில் வடமேற்காகச் செல்லும் 225 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையாகும். இது மட்டுமே கெமர் மக்களால் அமைக்கப்பட்ட சாலை அல்ல என்றாலும் இச்சாலை மிகமுக்கியமான ஒரு சாலையாகும்.

சாலையின் பெரும்பகுதி முழுவதும் வளர்ந்த காடுகளால் மூடப்பட்டு, வான்வழியாக எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் இருந்து மட்டுமே சாலையைக் காணமுடிகிறது. ஓய்வெடுக்கும் சிற்றாலயங்கள் அல்லது சிறு மருத்துவமனைகள் சில மட்டுமே அச்சாலையில் எஞ்சியுள்ளன. இக்கட்டிடங்களின் மரப்பாகங்கள் வெகுகாலத்திற்கு முன்னரே அழிந்து போனநிலையில், கட்டுமானத்திற்குப் பயன்படுத்திய மணற்பாறை அல்லது லேடரைட்டு கனிமத்தின் எச்சங்கள் இங்கு காணப்படுகின்றன. நுழைவுவாயிலாக பிமாய் நகரத்திற்குள் செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 2163 மட்டுமே இப்பொழுதும் போக்குவரத்திற்கு உதவும் வகையில் உள்ளது.

இச்சாலை 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு முந்தைய காலத்திலிருந்தே இருந்திருக்கலாம் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. இச்சாலையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மன்னர் ஏழாம் செயவர்மன் ஆட்சிக் காலம் நிலவிய காலத்தைச் சார்ந்தவையாக இருக்கின்றன.

டாங்கிரெக் மலையைக் கடந்து டா மியூன் டாம் கோயிலுக்குச் செல்வதற்கு இச்சாலை பயன்படுத்தப்படுகிறது. இச்சாலையில் முக்கியமான நிறுத்தமாக வருவது பானோம் ரங் கோயில் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]