பண்டித ஜகந்நாத சம்ராட்
தோற்றம்
பண்டித ஜகந்நாத சம்ராட் (Jagannatha Samrat) (1652–1744) இந்திய வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். அவர் ஜெய் சிங் II அவர்களின் அரண்மனையில் பணியாற்றியதுடன், அவருடைய குருவாகவும் இருந்தார்.ஜகந்நாதரின் தந்தை கணேஷா மற்றும் தாத்தா வித்தலா; அவர்கள் வேத பாரம்பரியத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் குடும்பம் முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்ததாகும்.
ஜெய் சிங் அவர்களின் பரிந்துரையின் பேரில், ஜகந்நாதர் இஸ்லாமிய வானியலைக் கற்க அரபு மற்றும் பாரசீக மொழிகளை கற்றார்.பின்னர், அந்த மொழிகளில் உள்ள நூல்களை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்தார். அவற்றில் சில முக்கியமானவை:
- ரேகா-கணிதம்: யூக்ளிட் எழுதிய எலிமெண்ட்ஸ் நூலை, நசீர் அல்-தீன் அல்-தூசி அவர்களின் அரபு பதிப்பிலிருந்து மொழிபெயர்த்தது. இந்தப் பணிக்காக அவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய சமஸ்கிருத கணிதச் சொற்களை உருவாக்கினார்.
- சித்தாந்த-சார-கௌஸ்துபம்: ப்டோலமி எழுதிய அல்மஜெஸ்ட் நூலை, அல்-தூசியின் அரபு பதிப்பிலிருந்து மொழிபெயர்த்தது.
அவரது சொந்த படைப்புகளில் முக்கியமானவை:
- சித்தாந்த-சம்ராட்: வானியல் கருவிகள், அவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் கண்காணிப்புகள் பற்றிய விளக்கங்கள் அடங்கிய நூல். இதில், முன்னர் உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகளை (உதா: அஸ்ட்ரோலேப்) பயன்படுத்திய ஜெய் சிங் பின்னர் அதிக துல்லியத்திற்காக பெரிய வெளிப்புற வானியல் மையங்கள் (உதா: ஜந்தர் மந்தர்) அமைத்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- யந்திர-ப்ரகாரா: வானியல் கருவிகள், அளவீடுகள், கணக்கீடுகள் மற்றும் அவருடைய கண்காணிப்புகள் குறித்து விரிவாக விளக்கும் நூல்.ஜகந்நாதர், கோட்பாடு மற்றும் கண்காணிப்பு முரண்பட்டால், கண்காணிப்பே உண்மையான ஆதாரம் (பிரமாணம்) என்று வலியுறுத்தினார்.அவர் பல வானியல் கருவிகளைப் பயன்படுத்தியிருந்தாலும், தொலைநோக்கிக் கருவி பயன்படுத்தப்படவில்லை.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- *Harilal Harshadarai Dhruva. "The ''Rekhaganita'' or Geometry in Sanskrit", pp. 35 ff. Bombay: Bombay Sanskrit Series, no. LXI, 1901.
- The Rekhaganita Sanskrit text with English introduction. Two volumes. (PDF)
- ↑ K. V. Sarma (2008), "Jagannātha Samrāṭ", in Helaine Selin (ed.), Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures, Dordrecht: Kluwer Academic Publishers (published 1997), pp. 460–61, Bibcode:2008ehst.book.....S
- ↑ Achar, Narahari (2007). "Jagannātha Samrāṭ". The Biographical Encyclopedia of Astronomers. Ed. Thomas Hockey. New York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. (PDF version, Google Books)