பண்டிட் கே. சந்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டிட் கே. சந்தானம் (25 ஆகத்து 1885 - 30 ஆகத்து 1949) சென்னை மாகாணத்தின் கும்பகோணத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவர். பாரிஸ்டர், அரசியல்வாதி, தொழிலதிபர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் லாலா லஜபதி ராயின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர். இலட்சுமி இன்சூரன்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவினார், அது பின்னர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக மாறியது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் கதையைத் தேசத்திற்குச் சொல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹண்டர் கமிஷனின் உறுப்பினராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலர். லாகூர் நகரத்தின் முன்னாள் நகர ஆணையராக விளங்கியவர்.

ஆர்ய சமாஜத் தலைவர் பண்டிட் ஆட்டம்ராம் வீயின் மகள் கிருஷ்ணாவை இவர் மணந்தவர். [1]

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Tribune, Chandigarh, India - Main News". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டிட்_கே._சந்தானம்&oldid=3515994" இலிருந்து மீள்விக்கப்பட்டது