உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டா ராமுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டா ராமுடு
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புடி. பி. நாராயண
எஸ். பவநாராயணா
கதைஆத்ரேயா (திரைக்கதை எழுத்தாளர்)
திரைக்கதைபி. புல்லையா
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
கே. பிரசாத ராவ்
நடிப்புஎன். டி. ராமராவ்
சாவித்திரி
ஒளிப்பதிவுஅன்னையா
படத்தொகுப்புஎம். எஸ். பிரகாசம்
ஆர். வி. ராஜன்
கலையகம்சாகினி ஆர்ட் புரொடக்சன்சு
வெளியீடு6 நவம்பர் 1959 (1959-11-06)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா

 

பண்டா ராமுடு (Banda Ramudu) என்பது 1959 ஆம் ஆண்டு பி. புல்லையா இயக்கிய இந்தியத் தெலுங்கு மொழி திரைப்படமாகும். இப்படத்தில் என். டி. ராமராவ், சாவித்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சுசர்லா தட்சிணாமூர்த்தி மற்றும் என்டிவி பிரசாத ராவ் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். இத்திரைப்படத்தை டி. பி. நாராயணன் மற்றும் எஸ். பவானாராயணன் ஆகியோர் சாகினி ஆர்ட் புரொடக்சன்சு பதாகையின் கீழ் தயாரித்தனர். இத்திரைப்படம் நவம்பர் 6,1959 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

கதைக்களம்

[தொகு]

ஒரு காலத்தில், தீய செயல்களுக்குப் பெயர் பெற்ற கொள்ளையரான பண்டா ராமுடு ஒரு நாட்டில் பதற்றத்தை உருவாக்கினார். இதை அறிந்த மன்னர், கல்வியறிவின்மை தான் இந்தச் செயலுக்குக் காரணம் என்பதை உணர்ந்து, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க சத்யனந்தா சுவாமியை அழைக்கிறார். தவிர, கோட்டையில் பூக்களை வழங்கும் பூக்காரரான கௌரி, ராமுவைச் சந்தித்து அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். இதற்கிடையே போலித்தனமான அமைச்சர் கவுரியின் மேல் தகாத விருப்பம் கொள்கிறார். கவுரி தப்பி ஓடும்போது அவளை கெடுநோக்குடன் துன்புறுத்த முயற்சிக்கிறார், ஆனால் அமைச்சரோ அவளை மீண்டும் கைது செய்கிறார். இந்த இக்கட்டான நேரத்தில், கௌரியின் தாயார் சுபத்ரம்மா, தன் மகளைக் காப்பாற்ற மன்னரிடம் வேண்டுகிறார், மன்னரும் கவுரியைக் காப்பாற்ற ஆணையிடுகிறார். அன்று இரவு, ராமு ஒரு கடையிலிருந்து திருடிவிட்டு தப்பித்து, சத்யனந்தாவின் குக்கிராமத்தில் ஒளிந்து கொண்டு அவரது பிரசங்கத்தைக் கேட்கிறார். ஊழலை முடிவுக்குக் கொண்டுவர, ஒவ்வொருவரும் தங்கள் முரட்டுத்தனமான பழக்கங்களில் ஒன்றையாவது விட்டுவிட வேண்டும் என்று சுவாமி அவர்களிடம் கூறுகிறார். ராமுவைச் சுட்டிக்காட்டி அவன் ஒரு திருடனாக இருக்கலாம் என்று கூறுகிறார். ராமு அவரைக் கொல்ல முயற்சிக்கிறார். திடீரென்று ஒரு பாம்பு அவரது கையைச் சுற்றி வளைத்துக் கொள்ள இராமு சுவாமியிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சுகிறான். சுவாமியின் வரத்தால் அவன் காப்பாற்றப்படும்போது, பயந்து, ராமு அவரிடம் சரணடைந்து, சுவாமி எச்சரிக்கும்போது ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன் என்று சபதம் செய்கிறார். அதன்பிறகு, ராமு ஒரு ஆபத்திலிருந்து கவுரியை காப்பாற்றி, அவரது வீட்டிற்குத் திரும்பி, சுபத்ரம்மாவிடம் தான் செய்யும் தொழிலைப் பற்றிக் கூறுகிறார்.

இதற்கிடையில், ராமு திருடன் அல்ல என்று கௌரி கூறும்போது, ராமு தான் திருடன் தான் என்று கூற, மன்னரின் வீரர்கள் ராமுவைக் கைது செய்கின்றனர், மேலும் கௌரியையும் கைது செய்கின்றனர். பின்னர், ராமுவை சிறையில் அடைத்து, கௌரியை மகாமந்திரி முன் ஆஜர்படுத்துகின்றனர். அவர் தந்திரமாக அரச ஒப்புதலை பெற்று, ராமுவை விடுவிக்கிறார். இருவரும் சுவாமியிடம் சென்று உண்மையைக் கூறி தங்கள் துயரத்தை வெளிப்படுத்துகின்றனர். சுவாமி அவனை ஆறுதல்படுத்தி, அதனை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கிறார். ராமு வேலை தேடி அலைகிறார், ஆனால், உண்மையைத் தான் கூறுவேன் என்ற சபதத்தின் காரணமாக அவருக்கு யாரும் வேலை தரவில்லை. மேலும், அரசன் உண்மையை அறிய ஆர்வமாக இருப்பதால், குருடனாக மாறுவேடத்தில் பயணிக்கிறார். இணையாக, ராமு கடைசி திருட்டை தேடுகிறார், அவர் மாறுவேடத்தில் இருக்கும் அரசனை சந்தித்து, அரசனின் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க விரும்புவதாக கூறுகிறார். விலை உயர்ந்த 4 கற்களில் ராமு மூன்றை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். பின்னர், ஓரிடத்தில் மன்னரிடம் கவுரி அமைச்சரின் வெங்கொடுமைகளைப் பற்றி விவரிக்கிறார். அவர் திரும்பி வந்த சிறிது நேரத்தில், நான்காவது மணியைக் கொள்ளையடிக்கும் அமைச்சரைப் பார்க்கிறார். அப்போது மீண்டும் பைத்தியம் போல நடித்து, ராமுவின் இருப்பிடத்தை மகாமந்திரிக்கு தெரிவிக்கிறார். கௌரியின் அறிவுரைகளைக் கேட்டு குற்றச் செயல்களிலிருந்து விலகுவதாக ராமு கூறியிருந்தார். பின்னர், அரசன் குருடனாக வருகிறார், ராமு மணிகளை மீட்கிறார். இதன்போது, நான்காவது மணியைத் திருடியதற்காக அமைச்சர் ராமுவைக் குற்றம் சாட்ட, ராமுவால் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போக, வீரர்கள் அனைவரையும் கைது செய்கின்றனர். இதன் விளைவாக, மறுநாள் ராமுவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தொடர்ந்து, அமைச்சர் கவுரியைப் பிடிக்க, மன்னர் தடுக்கிறார். ஆனால் அவரும் சிக்கிக்கொள்கிறார். இறுதியாக, ராமு சிறையிலிருந்து தப்பித்து, அரசனை காப்பாற்றி, மகாமந்திரியை அழித்து, கௌரியை மணக்கிறார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indiancine.ma" (in te). Zamin Ryot. 27 November 1959. https://indiancine.ma/document/ELZ/0,0,2256,7168. 
  2. BA Raju's Team [baraju_superhit] (6 November 2018). "Nataratna #NTR garu #Savitri garu, P Pullayya gari Directionlo natinchina Superhit Mass Entertainer #BandaRamudu completes 49 years (06/11/1959)" (Tweet). Retrieved 13 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டா_ராமுடு&oldid=4213349" இலிருந்து மீள்விக்கப்பட்டது