உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டார் லாம்புங்

ஆள்கூறுகள்: 5°27′0″S 105°16′0″E / 5.45000°S 105.26667°E / -5.45000; 105.26667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் லாம்புங்
Bandar Lampung
City of Bandar Lampung
Kota Bandar Lampung
ஆதிபுர நினைவுச்சின்னம்
தெற்கு பண்டார் லாம்புங்
தஞ்சோங் காராங் தொடருந்து நிலையம்
சிகெர் நினைவுச்சின்னம்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): Kota Kain Tapis
குறிக்கோளுரை:
மொழி மற்றும் கலாச்சாரம்
Ragom Gawi
பண்டார் லாம்புங் is located in இந்தோனேசியா
பண்டார் லாம்புங்
பண்டார் லாம்புங்
      பண்டார் லாம்புங்
ஆள்கூறுகள்: 5°27′0″S 105°16′0″E / 5.45000°S 105.26667°E / -5.45000; 105.26667
நாடு
 இந்தோனேசியா
பகுதிசுமாத்திரா
மாகாணம் லாம்புங்
நிறுவல்17 சூன் 1682
பரப்பளவு
 • மாநகரம்183.77 km2 (70.95 sq mi)
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2024)[1]
 • மாநகரம்10,77,664
 • அடர்த்தி5,900/km2 (15,000/sq mi)
 • பெருநகர்
16,00,000
HDI
 • HDI (2007)0.742
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +7
அஞ்சல்
35111 - 35246[2]
தொலைபேசி(+62) 721
இணையதளம்bandarlampungkota.go.id

பண்டார் லாம்புங் (இந்தோனேசியம்: Kota Bandar Lampung; ஆங்கிலம்: City of Bandar Lampung; இடச்சு: Oosthaven) என்பது இந்தோனேசியா, சுமாத்திரா, லாம்புங் மாகாணத்தின் தலைநகரம்; மற்றும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1983-ஆம் ஆண்டு, லாம்புங்கில் இருந்த தஞ்சோங் காராங்–தெலுக் பெத்துங் (Tanjungkarang–Telukbetung) எனும் இரண்டு பெரிய குடியிருப்புகளை ஒன்றிணைக்கப்பட்டன. அந்த ஒன்றிணைப்பின் கீழ் பண்டார் லாம்புங் உருவாக்கப்பட்டது.[3]

பண்டார் லாம்புங் மாநகரத்தின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் தெற்கு லாம்புங் பிராந்தியம் (South Lampung Regency); மேற்கு திசையில்; பெசவாரான் பிராந்தியம் (Pesawaran Regency) ஆகிய பிராந்தியங்கள் அதன் எல்லைகளாக உள்ளன. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநகரம் 881,801 மக்கள் தொகையையும்;[4] மற்றும் 2020-இல் 1,166,066 மக்கள் தொகையையும் கொண்டிருந்தது.[5] 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 1,077,664 (543,865 ஆண்கள்; 533,799 பெண்கள்) ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

லாம்புங் மாகாணத்தின் தலைநகரம் பண்டார் லாம்புங் ஆகும். பண்டார் லாம்புங் என்று பெயரிடப்படுவதற்கு முன்பு, இந்த நகரம் தஞ்சோங் காராங்–தெலுக் பெத்துங் (Tanjung Karang–Teluk Betung) எனும் பெயரிடப்பட்டது. இது தஞ்சோங் காராங் மற்றும் தெலுக் பெத்துங் ஆகிய இரண்டு நகரங்களின் கலவையாகும்.

அந்த இரண்டு நகரங்களும், இதற்கு முன்ன தெற்கு லாம்புங் பிராந்தியத்தின் (South Lampung Regency) ஒரு பகுதியாக இருந்தன. பண்டார் லாம்புங் நகரம் தஞ்சோங் காராங் நகரத்தையும் தெலுக் பெத்துங் நகரத்தையும் உள்ளடக்கியதால் பண்டார் லாம்புங் என்று மறுபெயரிடப்பட்டது. 1982-ஆம் ஆண்டில், மூன்று புதிய மாவட்டங்களைச் சேர்த்து பண்டார் லாம்புங் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டது.[6][7]

இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்

[தொகு]

சூன் 17, 1682 அன்று, பண்டென் சுல்தானகம் (Banten Sultanate) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், "லாம்புங்-தெலுக் பெத்துங் பகுதி, திபதி தெமாங்கோங் நாடா நெகாரா (Dipati Temenggung Nata Negara) மாவட்டத்தின் அதிகார மையமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அந்தக் காலக் கட்டத்தில் தெலுக் பெத்தோங்கில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர் என்றும் கூறுகிறது. இந்தத் தேதியை தற்போதைய லாம்புங் நிர்வாகம் லாம்புங்கின் அதிகாரப்பூர்வ நிறுவன நாளாக ஏற்றுக்கொண்டுள்ளது.[8]

இடச்சு காலனித்துவ நிர்வாகத்தின் கீழ், 1912 இசுடாட்சுபிளாட் 462 (1912 Staatsblad 462) எனும் நிர்வாகக் குறியீடு, இந்த நகரத்தை ஒன்டெராபடெலிங் தெலுக் பெத்தோங்கின் (Onderafdeling Telokbetong) ஒரு பகுதியாகக் குறியிட்டு உள்ளது. அந்த நகரம் இன்றைய தெலுக் பெத்துங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைக் கொண்டது. ஒன்டெராபடெலிங்கின் தலைநகரம் தஞ்சோங் காராங் ஆகும். அதே நேரத்தில் தெலுக் பெத்துங், லாம்புங்கிற்கான அரசு நிர்வாக இடமாகச் செயல்பட்டது.[8]

சப்பானிய ஆக்கிரமிப்பு

[தொகு]
1930-களில் தெலுக் பெத்துங்

இடச்சுக் கிழக்கிந்திய தீவுகளில் சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில் (Japanese occupation of the Dutch East Indies), இன்றைய பண்டார் லாம்புங் ஒரு நகரமாக நிர்வகிக்கப்பட்டது. ஒரு சப்பானிய நகர முதல்வரின் தலைமையில்; அவருக்கு ஓர் இந்தோனேசியத் துணை முதல்வர் (副市長, fuku-shicho) உதவியுடன் பண்டார் லாம்புங் நிர்வகிக்கப்பட்டது.[8]

விடுதலைக்குப் பின்னர்

[தொகு]

1945-இல் இந்தோனேசிய விடுதலைக்குப் பிறகு, தஞ்சோங் காராங் மற்றும் தெலுக் பெத்துங் ஆகிய இரு பகுதிகளும் தெற்கு லாம்புங் பிராந்தியத்தின் அதிகார வரம்பிற்குள் வந்தன. 1948-இல், ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, தஞ்சோங் காராங் மற்றும் தெலுக் பெத்துங் ஆகியவை தன்னாட்சி நகர நிலைக்கு உயர்த்தப்பட்டன.[8]

பண்டார் லாம்புங் சகோதரி நகரங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

இந்தோனேசிய மாநகரங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Kota Bandar Lampung Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.1871)
  2. "Kode POS Kota Bandar Lampung - urut Kecamatan/Distrik - hal 1". kodepos.nomor.net.
  3. "Peraturan Pemerintah Nomor 24 Tahun 1983". President of Republic Indonesia. 1983. Retrieved 5 July 2011.
  4. Biro Pusat Statistik, Jakarta, 2011.
  5. Badan Pusat Statistik, Jakarta, 2021.
  6. "Kota Bandar Lampung | BPK Perwakilan Provinsi LAMPUNG".
  7. "Sejarah Kota Bandar Lampung, Dimulai dari Telukbetung dan Tanjungkarang". 15 August 2021.
  8. 8.0 8.1 8.2 8.3 "PORTAL Berita Resmi Pemerintahan Kota Bandar Lampung". bandarlampungkota.go.id. Retrieved 3 June 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Bandar Lampung

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_லாம்புங்&oldid=4409752" இலிருந்து மீள்விக்கப்பட்டது