பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்
PY26 KT1A KB02A பண்டார் மலேசியா செலாத்தான் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பல்வகை போக்குவரத்து நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Bandar Malaysia Selatan | |||||||||||||||
| அமைவிடம் | பண்டார் மலேசியா, | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°06′28.3″N 101°41′51.0″E / 3.107861°N 101.697500°E | |||||||||||||||
| உரிமம் | எம்ஆர்டி நிறுவனம், விரைவுத் தொடருந்து இணைப்பு, மலாயா தொடருந்து | |||||||||||||||
| தடங்கள் | 1 பத்துமலை–புலாவ் செபாங் 7 கேஎல்ஐஏ போக்குவரத்து (விரைவு) 12 புத்ராஜெயா HSR கோலாலம்பூர்–சிங்கப்பூர் ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||
| நடைமேடை | தீவு நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 (கேடிஎம்) 2 (எஸ்எஸ்பி) 4 (இஆர்எல்) ? (எச்எஸ்ஆர்) | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | நிலத்தடி (SSP/PY) | |||||||||||||||
| தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலை | கட்டுமானத்தில் | |||||||||||||||
| நிலையக் குறியீடு | PY26 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Malaysia Selatan MRT Station; மலாய்: Stesen MRT Bandar Malaysia Selatan) என்பது மலேசியா, கோலாலம்பூர், சாலாக் செலாத்தான், பண்டார் மலேசியா திட்டத்தின் கீழ் கட்டுமானத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்; மற்றும் கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து சேவையின் முனையமும் ஆகும்.
கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து (Kuala Lumpur–Singapore high-speed rail) சேவையில் இந்த நிலையம் கோலாலம்பூரின் நுழைவாயிலாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.[1] இது புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் சுங்கை பீசி விரைவுச்சாலைக்குக்கு அருகில் பழைய வான்படை தளம் இருந்த இடத்தின் நிலத்தடியில் கட்டப்படுகிறது.[2]
பண்டார் மலேசியா
[தொகு]இந்த நிலையம் கோலாலம்பூர் சென்ட்ரலுக்கு இரண்டாம் நிலை போக்குவரத்து மையமாக இருக்கும். அங்கிருந்து கேஎல்ஐஏ போக்குவரத்து, கேடிஎம் கொமுட்டர் மற்றும் புத்ராஜெயா வழித்தடத்துடன் இணைக்கப்படும்.[3]
முதன்மையாக பண்டார் மலேசியாவின் தெற்குப் பகுதிக்கும்; வடக்கே பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றுக்கு இந்த நிலையம் சேவை செய்யும். மேலும் சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம் அமைந்துள்ள இடத்தில் பண்டார் மலேசியா மேம்பாட்டுப் பணிகளின் மீதமுள்ள பகுதிகளுடன் இணைத்துக் கட்டப்படுகிறது.[2]
எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தட நிலையம்
[தொகு]திட்டமிடப்பட்ட எம்ஆர்டி நிலையத்திற்கு தற்காலிகமாக பண்டார் மலேசியா செலாத்தான் என்று பெயரிடப்பட்டது. இந்த நிலையம் புத்ராஜெயா வழித்தடத்திற்கு சேவை செய்யும். எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தடம் மார்ச் 16, 2023 அன்று முழு செயல்பாடுகளைத் தொடங்கிய போதிலும், பண்டார் மலேசியாவில் திட்டமிடப்பட்ட நிலையங்கள் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.[2]
இந்த நிலையம், அருகிலுள்ள பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையத்துடன் சேர்த்து, எதிர்கால நிரப்பு நிலையங்களாகக் கருதப்படுகின்றன. சான் சோவ் லின் நிலையம் மற்றும் கூச்சாய் எம்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே இயங்கும் தொடருந்துகள் பண்டார் மலேசியா வழியாகச் செல்லும்; ஆனால் இந்த நிலையத்தில் நிற்பது இல்லை.[4]
மேலும் காண்க
[தொகு]- சுங்கை பீசி
- சாலாக் செலாத்தான்
- சுங்கை பீசி விரைவுச்சாலை
- சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம்
- கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Site in Sungai Besi chosen for high-speed railway station - Nation". The Star. Retrieved 31 May 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Bandar Malaysia Selatan MRT Station is built underground on the former site of old Air Force Base besides Sungai Besi Highway, along with Bandar Malaysia Utara MRT Station". mrt.com.my. Retrieved 20 October 2025.
- ↑ "Bandar Malaysia | World-Class Development in Greater KL". www.bandarmalaysia.my (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 31 May 2017.
- ↑ "Bandar Malaysia Selatan". MRT Corp (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 19 October 2021.
