பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம்
SP27 பண்டார் புத்திரி | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ![]() Bandar Puteri LRT Station | ||||||||||||||||
![]() பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் (2020) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | பூச்சோங்–டெங்கில் சாலை பண்டார் புத்திரி பூச்சோங் 47100, பூச்சோங், ![]() ![]() | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°1′1.4″N 101°36′46.2″E / 3.017056°N 101.612833°E | |||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||
இயக்குபவர் | ![]() | |||||||||||||||
தடங்கள் | ![]() | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | SP27 உயர்த்திய நிலை | |||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ![]() | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | SP27 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 31 மார்ச் 2016[4] | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Puteri LRT Station; மலாய்: Stesen LRT Bandar Puteri; சீனம்: 公主城轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பண்டார் புத்திரி பூச்சோங் நகர்ப் பகுதியில், பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையம்; பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் இந்த நிலையம் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இருப்பினும், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான எல்ஆர்டி நிலையங்களைப் போல அல்லாமல், இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகளுக்குப் பதிலாக ஒரு தீவு நடைமேடை மட்டுமே உள்ளது.
பொது
[தொகு]இந்த நிலையம் 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அம்பாங் மற்றும் செரி-பெட்டாலிங் வழித்தடங்களின் எல்ஆர்டி நீட்டிப்பு திட்டத்தின் (LRT Extension Project) ஒரு பகுதியாகும். இது பூச்சோங்கில் உள்ள மற்ற 3 நிலையங்களுடன் சேர்த்து 2016 மார்ச் 31 அன்று திறக்கப்பட்டது.[5]
வரலாறு
[தொகு]செரி பெட்டாலிங் வழித்தடம் மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களின் நீட்டிப்பு ஆகத்து 29, 2006 அன்று, அப்போதைய மலேசிய துணைப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் அவர்களால் அறிவிக்கப்பட்டது.[6]
இதை அப்போதைய மலேசியப் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி அவர்கள் 2006-ஆம் ஆண்டு தன் மலேசிய வரவு செலவு திட்ட உரையில் உறுதிப்படுத்தினார்.[7]
கட்டுமானம்
[தொகு]ரிங்கிட் RM 955.84 மில்லியன் மதிப்புள்ள இந்த நீட்டிப்புத் திட்டம், ஜோர்ஜ் கென்ட் (George Kent Bhd); மற்றும் அதன் கூட்டு அமைப்பான லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd) ஆகியவற்றின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.[8] கட்டுமானம் 2010-இல் தொடங்கியது.
அதே நேரத்தில் தொடருந்துகளின், தவறு இல்லாத சோதனை ஓட்டங்கள் 22 சனவரி 2016 அன்று தொடங்கியது. [9] சில தாமதங்களைச் சந்திக்க நேர்ந்தாலும்,[10] நீட்டிப்பின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த நிலையம் மார்ச் 31, 2016 அன்று திறக்கப்பட்டது.[11][12][13]
நிலைய நுழைவாயில்கள்
[தொகு]SP27 பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் | |||
நுழைவாயில் | அமைவு | இலக்கு | தோற்றம் |
---|---|---|---|
A | மேற்குப் பக்கம் | தொழில்துறை பகுதி (டிராக்டர் மலேசியா) | |
B | கிழக்குப் பக்கம் | புத்திரி பேரங்காடி, பண்டார் புத்திரி |
நிலைய அமைப்பு
[தொகு]P | பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும் ![]() | |
நடைபாதை 1 செரி பெட்டாலிங் | ← ![]() | |
நடைபாதை 2 செரி பெட்டாலிங் | → ![]() | |
பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும் ![]() | ||
C | ஒருங்கிணைவு நிலை | பயணச்சீட்டு தானியங்கி, தானியங்கி கட்டணக் கடவுகள், வாடிக்கையாளர் சேவை நிலையம், பாதசாரி பாலம் ![]() |
G | தெருநிலை | தரிப்பிடம், பேருந்து நிறுத்தம், பேருந்து தகவல் நிலையம், பல்பொருள் விற்பனைக் கடை ![]() |
* ![]() |
பேருந்து சேவைகள்
[தொகு]பேருந்து | தொடக்கம் | இலக்கு | வழி | இணைப்பு |
---|---|---|---|---|
![]() |
SP27 பண்டார் புத்திரி எல்ஆர்டி ⇌ பூச்சோங் தொழில் பூங்கா[14] | பூச்சோங் அர்த்தாமாஸ் | பூச்சோங் தொழில் பூங்கா ⇌ தாமான் பூச்சோங் அர்த்தாமாஸ் ⇌ தாமான் பூச்சோங் அர்த்தாமாஸ் 2 ⇌ பண்டார் புத்திரி பூச்சோங் | SP27 பண்டார் புத்திரி எல்ஆர்டி |
![]() |
KG16 கோத்தா ராயா ⇌ பசார் செனி (Hub D) [16] | SP27 புத்ரா பெர்டானா | சையட் புத்ரா சாலை ⇌ புத்ரா பெர்டானா சாலை 6A | தாமான் சௌஜானா பூச்சோங் ⇌ பண்டார் புக்கிட் பூச்சோங் 1 ⇌ ![]() |
![]() |
கோத்தா ராயா / பசார் செனி (Hub D) | SP26 பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையம் ⇌ தாமான் சௌஜானா பூச்சோங் ⇌ பண்டார் புக்கிட் பூச்சோங் 1 | KG16 பசார் செனி ⇌ சௌஜானா பூச்சோங் | சையட் புத்ரா சாலை ⇌ புக்கிட் பூச்சோங் சாலை |
![]() |
KG16 பசார் செனி ⇌ சௌஜானா பூச்சோங் | புலாவ் மெராந்தி | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் ⇌ புலாவ் மெராந்தி பள்ளிவாசல் | SP27 பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் |
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
[தொகு]அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
[தொகு]பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2017)
மேலும் காண்க
[தொகு]- பூச்சோங்
- பண்டார் பூச்சோங்
- பண்டார் புத்திரி பூச்சோங்
- பூச்சோங் ஜெயா
- பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்
- பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம்
- பூச்சோங் விரைவுச்சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. Retrieved 15 November 2024.
- ↑ "Park N' Ride - Travelling with Us". myrapid.com.my. MyRapid. Retrieved 2 July 2020.
- ↑ "Bike N' Ride - Travelling with Us". myrapid.com.my. MyRapid. Retrieved 2 July 2020.
- ↑ Ahmad, Azyyati (28 March 2016). "Empat stesen baharu LRT di Puchong beroperasi 31 Mac ini" (in ms). https://www.astroawani.com/berita-malaysia/empat-stesen-baharu-lrt-di-puchong-beroperasi-31-mac-ini-100151.
- ↑ Muhammad Farhan bin Mohd Arif (July 2017). A Study on Ridership Capacity Analysis at Rapid Kelana Jaya Line Station (PDF) (Report). Faculty of Engineering Technology, Universiti Tun Hussein Onn Malaysia. p. 23,24. Retrieved 26 June 2020.
- ↑ "Cover Story: Outlook for Puchong remains bright". The Edge Markets. 2019-06-11. Retrieved 2020-06-25.
- ↑ Haji Ahmad Badawi, Abdullah. "Ucapan Bajet Tahun 2006".
- ↑ "George Kent's LRT line extension project worth RM955.84m". The Edge Markets. 2012-08-01. Retrieved 2020-06-25.
- ↑ "George Kent-Lion Pacific JV gets Ampang Line extension job". 2017-09-12. Archived from the original on 2017-09-12. Retrieved 2020-06-25.
- ↑ "LRT Line Extension Project". Railway Technology (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2020-06-26.
- ↑ "Tests on LRV fault free runs in Kinrara start today | The Star". www.thestar.com.my. Retrieved 2020-06-28.
- ↑ "Delay in Kelana Jaya-Ampang LRT line extension". The Edge Markets. 2013-09-30. Retrieved 2020-06-25.
- ↑ "Another four LRT stations in Puchong to open next week | The Star". www.thestar.com.my. Retrieved 2020-06-28.
- ↑ "Number - Bus | MyRapid Your Public Transport Portal". www.myrapid.com.my. Retrieved 2020-05-08.
- ↑ "Malaysia online express bus ticketing in Johor Bahru and Singapore|causewaylink express". www.causewaylink.com.my. Retrieved 2020-06-28.
- ↑ "Malaysia online express bus ticketing in Johor Bahru and Singapore". www.causewaylink.com.my. Retrieved 2020-07-07.
- ↑ "Malaysia online express bus ticketing in Johor Bahru and Singapore|causewaylink express". www.causewaylink.com.my. Retrieved 2020-06-28.
- ↑ "Malaysia online express bus ticketing in Johor Bahru and Singapore|causewaylink express". www.causewaylink.com.my. Retrieved 2020-06-28.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் ITaman Perindustrian Puchong LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Taman Bandar Puteri LRT Station - KL MRT Line Integrations
- Monorail and LRTs - Rapid KL பரணிடப்பட்டது 2021-02-27 at the வந்தவழி இயந்திரம்