பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம்
KG29 பண்டார் துன் உசேன் ஓன் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
துன் உசேன் ஓன் நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Bandar Tun Hussein Onn MRT Station Stesen MRT Bandar Tun Hussein Onn சீனம்: 敦胡先翁鎮 | |||||||||||||||
| அமைவிடம் | பண்டார் துன் உசேன் ஓன் செராஸ் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°12′23″N 101°34′49″E / 3.20639°N 101.58028°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | ||||||||||||||||
| நடைமேடை | 2 பக்க நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 தடங்கள் | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலையம் | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG29 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG29 17 சூலை 2017 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Tun Hussein Onn MRT Station; மலாய்: Stesen MRT Bandar Tun Hussein Onn) என்பது மலேசியா, கோலாலம்பூர், செராஸ், உலு லங்காட் மாவட்டம், பண்டார் துன் உசேன் ஓன் (Bandar Tun Hussein Onn) நகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம்
(Cheras–Kajang Expressway) செராஸ்–காஜாங் விரைவுச்சாலையின் பண்டார் துன் உசேன் ஓன் சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ளது.
பண்டார் துன் உசேன் ஓன்
[தொகு]பண்டார் துன் உசேன் ஓன் (Bandar Tun Hussein Onn) என்பது சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தின் செராஸ் 11-ஆவது மைலில் (Batu 11 Cheras) உள்ள புற நகரப்பகுதி ஆகும். இது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென்கிழக்கே 13 கி.மீ. தொலைவிலும் காஜாங்கிற்கு வடக்கே 7.5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பொதுவாகவே பண்டார் துன் உசேன் ஓன், ஒரு குடியிருப்பு பகுதி ஆகும்; 1990-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. 1989ஆம் ஆண்டில், செராஸ் பகுதியில் 752 ஏக்கர் (304 எக்டேர்) நிலத்தைக் கையகப்படுத்தி பண்டார் துன் உசேன் ஓன் நகரம் உருவாக்கப்பட்டது.[1]
காஜாங் வழித்தடம்
[தொகு]9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[2]
பொது
[தொகு]9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[3] பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் பண்டார் துன் உசேன் ஓன் புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[4]
நிலைய அமைப்பு
[தொகு]இந்த நிலையம், காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை உள்ளது.
இரட்டை வழித்தடங்களிலும் இரண்டு பக்க நடைமேடைகள் உள்ளன; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகளும் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
| L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C |
| G | தரை மட்டம் | நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செராஸ் சாலை |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]இந்த நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. நிலையத்தின் ஊட்டி பேருந்து (Feeder Bus) மையத்திலிருந்து நுழைவாயில் B வழியாக ஊட்டி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | செராஸ் பெர்டானா | வாடகை வாகனம்; தனியார் வாகனம், செராஸ் பெர்டானா, பண்டார் துன் உசேன் ஓன் | |
| B | எம்ஆர்டி வாகன நிறுத்துமிடம் | எம்ஆர்டி வாகன நிறுத்து சேவைகள், ஊட்டி பேருந்து நிறுத்தம் | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி |
|---|---|---|---|
| பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் | பண்டார் மாக்கோத்தா செராஸ் | பெர்சியாரான் மாக்கோத்தா செராஸ் 1; தெமாங்கோங் சாலை; பரமேசுவரி சாலை; பிஎம்சி பேரங்காடி |
பிற பேருந்து சேவைகள்
[தொகு]பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
| பேருந்து | இயக்குநர் | தொடக்கம் | இலக்கு | பயணவழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| ரேபிட் கேஎல் | தாமான் துன் பேராக் | பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் | பெர்சியாரான் துன் பேராக்; இயோன் பிக் பண்டார் துன் உசேன் ஓன்; சுடாமாய் சாலை; இயோன் தெற்கு செராஸ்; செராஸ் பெர்டானா சாலை |
காட்சியகம்
[தொகு]பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் (2023)
மேலும் காண்க
[தொகு]- பிரசரானா மலேசியா
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
[தொகு]- எம்ஆர்டி நிறுவனம்
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
- 9 காஜாங் (MRT1)
- 12 புத்ராஜெயா (MRT2)
- 13 சுற்று வழித்தடம் (MRT3)
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Urban Development Authority (UDA) was established by the government on 12 November 1971". www.uda.com.my (in ஆங்கிலம்). Retrieved 19 August 2023.
- ↑ Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy.
- ↑ "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html.
- ↑ "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/.
- ↑ "Bandar Tun Hussein Onn MRT Feeder Bus T415 | mrt.com.my". mrt.com.my. Retrieved 2020-12-31.
- ↑ "Line Route KJ03 - Smart Selangor (operated by rapidKL) - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2020-12-31.
