பண்டார் சுங்கை லோங்
பண்டார் சுங்கை லோங் நகரம் | |
![]() | |
| ஆள்கூறுகள்: 3°02′34″N 101°47′56″E / 3.04278°N 101.79889°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | காஜாங்; செராஸ் |
| நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
| அஞ்சல் குறியீடு | 43000[1] |
| தொலைபேசி | +60-3-9074 |
பண்டார் சுங்கை லோங் (ஆங்கிலம்; மலாய்: Bandar Sungai Long) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங்; செராஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும். 10,000 குடியிருப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நகர்ப்பகுதி, பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் ஒரு வசதியான குடியிருப்பு புறநகர்ப் பகுதி என அறியப்படுகிறது.
இந்த நகரத்தில் பெரும்பான்மையான மக்கள் சீனர்கள் ஆவார்கள்; இருப்பினும் சிறுபான்மையினராக இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் வசிக்கின்றனர்.
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
[தொகு]பண்டார் சுங்கை லோங்கில் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் (Universiti Tunku Abdul Rahman) ஒரு வளாகத்தை இயக்கி வருகிறது.[1] இந்தப் பல்கலைக்கழகம் தற்போது காஜாங் நகராட்சி (Kajang Municipal Council) நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாராந்திர இரவுச் சந்தை (Pasar Malam) நடைபெறுவது வழக்கம்.
மலேசியாவின் 10-ஆவது பிரதமரும்; மற்றும் தற்போதைய பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2021 முதல் தம் குடும்பத்துடன் பண்டார் சுங்கை லோங்கில் வசித்து வருகிறார்.
போக்குவரத்து
[தொகு]புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து பண்டார் சுங்கை லோங்கிற்கு ரேபிட் கேஎல்
T453 பேருந்து மூலமாக அணுகலாம்.[2] அத்துடன்
590 பேருந்து மூலமாகவும் அணுகலாம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bandar Sungai Long, Kajang - Postcode - 43000 - Malaysia Postcode". postcode.my. Retrieved 26 September 2025.
- ↑ "MyRapid - Bus Kiosk | T453". Rapid KL (in ஆங்கிலம்). 27 June 2022. Retrieved 27 June 2022.
- ↑ "MyRapid - Bus Kiosk | 590". Rapid KL (in ஆங்கிலம்). 27 June 2022. Retrieved 27 June 2022.
